மத்திய அமைச்சர் மகன் கார் மோதி இருவர்பலி:வன்முறையில் 8 பேர் பலி

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதிக்கு வருகை தர இருந்த துணை முதல்வருக்கு, வேளாண் சட்டங்கள் தொடர்பாக கருப்பு கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர். அவர்கள் மீது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியாயினர்.அதனை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் எட்டு பேர் பலியாகி உள்ளனர். மத்திய

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதிக்கு வருகை தர இருந்த துணை முதல்வருக்கு, வேளாண் சட்டங்கள் தொடர்பாக கருப்பு கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர். அவர்கள் மீது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியாயினர்.அதனை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் எட்டு பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் சொந்த ஊர் உ.பி.,யின் லக்கிம்பூர் கேரிக்கு அருகே உள்ள திக்குனியா. அங்கு இன்று (அக்., 03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். இதனையறிந்த விவசாயிகள் சங்கத்தினர், புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக்கோரி அவருக்கு கருப்புக் கொடி காட்ட திரண்டனர். அப்போது மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா துணை முதல்வரை வரவேற்க தனது காரில் சென்றுள்ளார்.

அவரது காரையும் மறித்து காரின் முன் திரண்டு விவசாயிகள் கோஷங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது. அவர்களை இடித்து தள்ளியபடி அங்கிருந்து காரை எடுத்துச் சென்றுள்ளார் ஆஷிஷ் மிஸ்ரா. இதில் விவசாயிகள் சிலர் படுகாயமடைந்தனர். மூவர் உயிரிழந்ததாக பாரதிய விவசாயிகள் சங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தை அறிந்து ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் உட்பட சில கார்களை கொளுத்தியுள்ளனர். இதனால் திக்குனியா கிராமம் கலவர பூமியாகியுள்ளது.இச்சம்பவத்தில் விவசாயிகள் உள்பட எட்டு பேர் வரையில் பலியாகி உள்ளனர்.


முதல்வர் நடவடிக்கை



நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்திற்கு கூடுதல் டி.ஜி.பி., பிரசாந்த் குமாரை அனுப்பியுள்ளார். பாரதிய விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகைத்தும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், “அமைதியாக போராடிய விவசாயிகளை நசுக்கும் மத்திய உள்துறை அமைச்சரின் இச்செயல் மனிதாபிமானமற்றது, கொடூரமானது.” என கூறியுள்ளார்.


விவசாயிகள் கோரிக்கை

உ.பி.,யில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் துப்பாக்கியால் சுட்டதாகவும் அதன் காரணமாக விவசாயி ஒருவர் பலியானதாகவும் விவசாயிகள் கூறினர். மேலும் அமைச்சரை பதவியில் இருந்து நீக்கவும், அவரது மகனை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


மத்திய அமைச்சர் மறுப்பு


சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தின் போது தனது மகன் அங்கு இல்லாது இருப்பதை வீடியோவில் தெளிவாக உள்ளது. மேலும் விவசாயிகள் போராட்டத்தில் பா.ஜ..வை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Bala - London,யுனைடெட் கிங்டம்
04-அக்-202108:30:46 IST Report Abuse
S Bala போராட்டம் என்ற பெயரில் ஒரு கடசியின் தொண்டர்கள், தலைவர்கள், அவர்கள் உறவுகள், அனைவரையும் தாக்கும் செயலை ஆதரிக்க கூடாது. திக்காயத் என்ற ஒரு ரவுடியின் (அவனது சொத்து மதிப்பு எண்பது கோடி) தூண்டுதலை அவனது அடியாட்களை ஒழிப்பதன் மூலமே கட்டுப்படுத்த முடியும். காரை மரித்தவனை கார் ஏற்றி கொன்றது நியாயமே.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04-அக்-202106:25:45 IST Report Abuse
Natarajan Ramanathan உபியில் இரண்டு விவசாயிகள் உயிர் இழந்ததை கண்டித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா?
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
03-அக்-202123:39:43 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //போராட்டத்தின் போது தனது மகன் அங்கு இல்லாது இருப்பதை வீடியோவில் தெளிவாக உள்ளது. // இத விட புத்திசாலி பாஜாக்காவை விட்டா எங்கேயும் கெடைக்கமாட்டானுவ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X