ஆயுதங்கள்: ட்ரோன் மூலம் ஜம்முவில் வீசியது பாக்.,; யாருக்காக என போலீசார் விசாரணை

Updated : அக் 05, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
பாகிஸ்தானில் இருந்து வந்த ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் ஜம்முவில் வீசிச் சென்ற ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.யாருக்காக வீசப்பட்டன என விசாரிக்கின்றனர். ஜம்மு:ஜம்முவில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து வந்த, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வீசிச் சென்ற ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமான
ஆயுதங்கள்: ட்ரோன் மூலம் ஜம்முவில் வீசியது பாக்.,; யாருக்காக என போலீசார் விசாரணை

பாகிஸ்தானில் இருந்து வந்த ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் ஜம்முவில் வீசிச் சென்ற ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.யாருக்காக வீசப்பட்டன என விசாரிக்கின்றனர்.

ஜம்மு:ஜம்முவில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து வந்த, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வீசிச் சென்ற ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமான ஜம்முவில் சர்வதேச எல்லையை ஒட்டி சவுஜானா கிராமம் உள்ளது.


பாதுகாப்பு படை

இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், நேற்று முன்தினம் இரவு போலீசில் அளித்த புகாரில், ' என் வீட்டின் அருகில் ட்ரோன் பறக்கும் சத்தமும், பெரிய மூட்டை வீசப்படும் சத்தமும் கேட்டது' என்றார்,.

இதையடுத்து, சவுஜானா கிராமத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, ஒரு இடத்தில் மஞ்சள் நிறத்தில் மூட்டை ஒன்று கிடப்பதை பார்த்து அதை சோதனையிட்டனர். பிரித்து பார்த்த போது அதில், ஏ.கே., ரக துப்பாக்கி, வெடிகுண்டுகள், துப்பாக்கி குண்டுகள், டெலஸ்கோப் ஆகியவை இருந்தன. இந்த ஆயுதங்களை யாருக்காக, பாக்., ட்ரோன் கொண்டு வந்து போட்டது என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக பாகிஸ்தானிலிருந்து ஜம்மு - காஷ்மீர் பகுதிக்குள் ட்ரோன்கள் வருவது அதிகரித்துள்ளது; இது, பாதுகாப்பு படையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. ஜூனில் பாகிஸ்தானிலிருந்து வந்த ட்ரோன், ஜம்முவில் விமானப்படைதளத்தில் தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர்.இதன்பின் ஜம்மு பகுதியின் சர்வதேச எல்லையில் சக்திவாய்ந்த வெடிபொருட்களுடன் வந்த ட்ரோனை, போலீசார் சுட்டு வீழ்த்தினர்.


இருவர் பலி

இதற்கிடையே, ஸ்ரீநகரின் படமலுாவில் வசிக்கும் முகமது ஷாபி தார் என்பவரை, நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் சுட்டனர். இதில் படுகாயம்அடைந்த தாரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். ஸ்ரீநகரின் கரன்நகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை மஜித் அகமது கோஜ்ரி என்பவரை, பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.


என்.ஐ.ஏ., சோதனை



ஜம்மு - காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக, போலி ரூபாய் நோட்டுகளும், ஹவாலா பணமும் கடத்தப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில், 2016ல் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பூஞ்ச் மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஜம்மு - காஷ்மீர் போலீசார் மற்றும் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து, சோதனையில் ஈடுபட்டனர்.இதில் பல முக்கிய ஆவணங்கள், மின்னணு கருவிகள் உட்பட பலவற்றை போலீசார் கைப்பற்றினர்.


போதை பொருள் பறிமுதல்

வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டம் யூரி பகுதியில், சிலரின் நடமாட்டம் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் இருப்பதை பாதுகாப்பு படையினர் அறிந்தனர். இதையடுத்து தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு இடத்தில், 'பார்சல்' ஒன்று கிடப்பதை பார்த்தனர். அதை கைப்பற்றி பார்த்தபோது, அதில், 30 கிலோ எடையுள்ள போதைப் பொருள் இருப்பது தெரிந்தது. 'ஜம்மு - காஷ்மீருக்குள் போதைப் பொருளை கடத்தும் நோக்கில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து சிலர் வந்துள்ளனர்.

'பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பினால் போதைப் பொருள் பார்சலை போட்டுவிட்டு, பாக்., பகுதிக்குள் சென்றுவிட்டனர்' என, பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். 'கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு, 25 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்' என அவர் தெரிவித்தார்.


என்.ஐ.ஏ., சோதனை



ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக போலி ரூபாய் நோட்டுகளும் ஹவாலா பணமும் கடத்தப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் 2016-ல் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலானய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பூஞ்ச் மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஜம்மு -காஷ்மீர் போலீசார் மற்றும் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் மின்னணு கருவிகள் உட்பட பலவற்றை போலீசார் கைப்பறினர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-அக்-202123:13:27 IST Report Abuse
தமிழவேல் வந்து எடுத்துகிட்டுப் போகும்போது அவனுவோலை அமுக்கி இருக்கலாமே...ஆமாம், அது எப்புடி இவ்வளவு தூரம் வந்துச்சி..
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
04-அக்-202120:32:08 IST Report Abuse
Nagarajan D எல்லாம் அந்த சுயநலவாதி காந்தியும் ஜின்னாவும் செய்த பாவம்.... தீவிரவாதிகளை வளர்த்து விட்டது இந்த கால காந்தி நேரு குடும்பம்... அதனால் வரும் மோசமான விளைவுகளை அனுபவிப்பது பாரத தேசம்
Rate this:
Cancel
Nanban - Kajang,மலேஷியா
04-அக்-202107:07:41 IST Report Abuse
Nanban மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும் , பாகிஸ்தான் இருக்கும் வரை பிரச்சனை இருக்கும்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
04-அக்-202114:13:42 IST Report Abuse
 Muruga Velசளி தொல்லையா ...மிளகு ரசம் சாப்பிடுங்க ..மூச்சு விட மூக்கு தானே தேவை ..இல்லாட்டி கேஸ் ப்ராப்லம் வருமே .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X