பொது செய்தி

தமிழ்நாடு

கண்புரை அறுவை சிகிச்சைக்கு 57 பேர் தேர்வு

Added : அக் 03, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த கண் சிகிச்சை முகாமில், 57 பேர், இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் மங்களாம்பிகா கேட்டரிங் சர்வீஸ், ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டி மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், பெரிய காஞ்சிபுரத்தில் நேற்று, இலவச கண் அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.காஞ்சிபுரம் அரிசி ஆலை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த கண் சிகிச்சை முகாமில், 57 பேர், இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மங்களாம்பிகா கேட்டரிங் சர்வீஸ், ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டி மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், பெரிய காஞ்சிபுரத்தில் நேற்று, இலவச கண் அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.காஞ்சிபுரம் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பரணிதரன், மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.

இதில் 205 பேர் பங்கேற்றனர்.கண்புரை குறைபாடு உள்ள 57 பேர் தேர்வு செய்யப்பட்டு, விழிலென்ஸ் பொருத்தி, இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்காக, பூந்தமல்லி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.லேசான கண்பார்வை குறைபாடுள்ள, 75 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது என, முகாம் ஏற்பாட்டாளர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X