ஓட்ட பந்தயத்துக்கு தயாரா? ம.பி., முதல்வருக்கு சவால்!

Updated : அக் 05, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
போபால்:''மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், என்னுடன் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க தயாரா?'' என, அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் சவால் விட்டுள்ளார்.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில காங்., தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத்துக்கு 74 வயதாகிறது. அவரது உடல்நிலை
 ஓட்ட பந்தயத்துக்கு தயாரா? ம.பி., முதல்வருக்கு சவால்!

போபால்:''மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், என்னுடன் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க தயாரா?'' என, அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் சவால் விட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில காங்., தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத்துக்கு 74 வயதாகிறது. அவரது உடல்நிலை குறித்து, மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வருகிறார்.

இது குறித்து கமல்நாத் கூறி உள்ளதாவது: எனக்கு வயதாகிவிட்டதாகவும், உடல்நிலையும் சரியில்லை என்றும், டில்லியில் ஓய்வில் இருப்பதாகவும் சிவ்ராஜ் சிங் சவுகான் என்னைப் பற்றி கூறியுள்ளார். நான் அவரிடம் வெளிப்படையான சவால் விடுகிறேன். என்னுடன் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று, உங்கள் உடல் உறுதியை நிரூபிக்க தயாரா?

நான் கொரோனாவில் இருந்து மீண்ட பின் நிமோனியாவால் பாதிக்கப்பட்டேன்; அதற்கான பரிசோதனைகள் செய்யவே மருத்துவமனை சென்றேன். தற்போது நன்றாக உள்ளேன்.நான் உடல்நிலை பாதிக்கப்பட்டு டில்லியில் ஓய்வெடுக்க வரவில்லை. எனக்கு இங்கு நிறைய வேலைகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
04-அக்-202114:02:57 IST Report Abuse
sankaseshan ராஜிவ் காந்தியின் முன்னாள் டிரைவருக்கு திமிர் இன்னும் அடங்கவில்லை 10 அடிகூட இவனால் ஓட முடியாது
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
04-அக்-202109:45:48 IST Report Abuse
duruvasar முட்டுகாட்டிலிருந்து மாமல்லபுரம் வரை சைக்கிள் ஓட்டி செல்லும்70 வயது மார்க்கண்டேயர் களை உள்ளடிக்கிய தமிழகம் என்று கூறிகொள்ள விரும்புகிறோம்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
04-அக்-202106:54:40 IST Report Abuse
NicoleThomson யோவ் வடிவேலு சின்னப்புள்ளைத்தனமால்ல இருக்கு என்று நீங்க கூறும் வசனத்தை இவரு நினைவு படுத்துறாரு , இவரு உங்க எதுகை மோனையை பயன்படுத்துயிருப்பாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X