பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளூர் 'டிவி' சேனல்களில் தேர்தல் விழிப்புணர்வு

Added : அக் 03, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்., 6, 9ம் தேதி என, இரு கட்டங்களாக நடைபெறுகிறது.அதற்காக தேர்தலில் ஓட்டளிக்கும் முறை குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.மொத்தம், 3 நிமிடம், 13 நொடிகள் உடைய விழிப்புணர்வு குறும்படத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவு குறித்தும், ஓட்டுச்சாவடியில் உள்ள ஏற்பாடுகள், கொரோனா
 உள்ளூர் 'டிவி' சேனல்களில் தேர்தல் விழிப்புணர்வு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்., 6, 9ம் தேதி என, இரு கட்டங்களாக நடைபெறுகிறது.
அதற்காக தேர்தலில் ஓட்டளிக்கும் முறை குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.மொத்தம், 3 நிமிடம், 13 நொடிகள் உடைய விழிப்புணர்வு குறும்படத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவு குறித்தும், ஓட்டுச்சாவடியில் உள்ள ஏற்பாடுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேசப்படுகிறது.
ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்களுக்கான முறையே வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறத்தினால் ஆன ஓட்டு சீட்டுகளை எவ்வாறு மடித்து ஓட்டளிக்க வேண்டும் என, கலெக்டர் ஆர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்தில் மட்டுமல்லாமல், காஞ்சிபுரத்தில் உள்ள, 30க்கும் மேற்பட்ட உள்ளூர் டிவி சேனல்களிலும் தேர்தலில் ஓட்டளிக்கும் முறை குறித்த, விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X