பராமரிப்பில்லாத சிறுவர் பூங்கா

Added : அக் 03, 2021
Share
Advertisement
மப்பேடு : மப்பேடு ஊராட்சி சமத்துவபுரத்தில், சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில், 1996ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி காலத்தில், சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. இங்கு தற்போது, 70 குடும்பங்கள் உள்ளனர்.'குடி'மையம்இப்பகுதியில், குழந்தைகளுக்காக, விளையாட்டு

மப்பேடு : மப்பேடு ஊராட்சி சமத்துவபுரத்தில், சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில், 1996ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி காலத்தில், சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. இங்கு தற்போது, 70 குடும்பங்கள் உள்ளனர்.'குடி'மையம்இப்பகுதியில், குழந்தைகளுக்காக, விளையாட்டு உபகரணங்களுடன்கூடிய சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்கா போதிய பராமரிப்பு இல்லாததால், விளையாட்டு உபரணங்கள், சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையிலும், புதர் மண்டி இருப்பதால், தற்போது சிறுவர் பூங்கா, 'குடி'மையமாக மாறிவிட்டது.

எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகம், சமத்துவபுரத்தில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதுகுறித்து, ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறுகையில், ''மப்பேடு ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள சிறுவர் பூங்கா சீரமைப்பு குறித்து அரசுக்கு தகவல் அனுப்பப்படும். அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு மற்றும் உத்தரவு வந்தவுடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X