மக்களை பயமுறுத்தும் குரங்குகள்

Added : அக் 03, 2021
Share
Advertisement
கனகம்மாசத்திரம் : கனகம்மாசத்திரம் அடுத்த, ஆற்காடு குப்பம் ஊராட்சியில், 10க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக வீடுகள் அருகில் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.ஆற்காடு குப்பம் ஊராட்சியில் குரங்குகள் அட்டகாசம் செய்வதாக அப்பகுதி மக்கள் கடந்த மாதம் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர்.கிராமத்தில் சோதனை செய்து மூன்று குரங்குகள் வனத் துறையால் பிடிக்கப்பட்ட

கனகம்மாசத்திரம் : கனகம்மாசத்திரம் அடுத்த, ஆற்காடு குப்பம் ஊராட்சியில், 10க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக வீடுகள் அருகில் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆற்காடு குப்பம் ஊராட்சியில் குரங்குகள் அட்டகாசம் செய்வதாக அப்பகுதி மக்கள் கடந்த மாதம் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர்.கிராமத்தில் சோதனை செய்து மூன்று குரங்குகள் வனத் துறையால் பிடிக்கப்பட்ட நிலையில், ஒரு வாரமாக மீண்டும் குரங்குகள் ஆற்காடு குப்பத்தில் வர துவங்கி உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இது குறித்து மக்கள் கூறியதாவது:கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வரவே பயமாக உள்ளது. கூட்டமாக திரியும் குரங்குகள் கையில் எந்த பொருள் கொண்டு வந்தாலும் பாய்ந்து வந்து பறிக்கின்றன.
வனத்துறை மீண்டும் ஆய்வு செய்து குரங்குகளை பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.திருத்தணி வனச்சரக ரேஞ்சர் அருளானந்தம் கூறுகையில், ''கூண்டு வைத்து தான் குரங்குகள் பிடிக்க முடியும். ஒருமுறை பிடித்தால், குறைந்தது, 10 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். அப்போது தான், குரங்குகள் கூண்டில் சிக்கும். அடுத்த வாரம் அங்கு குரங்கு பிடிக்க உள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X