பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் துவங்க மானியத்துடன் கடன்

Added : அக் 03, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், பட்டதாரிகள், பட்டயதாரிகள், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கடன் பெற விரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பத்து லட்சம் முதல், 5 கோடி ரூபாய் வரை, திட்ட மதிப்பீடு கொண்ட உற்பத்தி சேவை நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறலாம்.திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக, 25

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், பட்டதாரிகள், பட்டயதாரிகள், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கடன் பெற விரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பத்து லட்சம் முதல், 5 கோடி ரூபாய் வரை, திட்ட மதிப்பீடு கொண்ட உற்பத்தி சேவை நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறலாம்.திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக, 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். 2020- - 21ம் ஆண்டு, 39 பேருக்கு, 5 கோடி ரூபாய் மானியத்துடன்கூடிய கடனுதவி வழங்கப்பட்டது.நடப்பு நிதியாண்டு, 2021- - 22-ல், 44 பேருக்கு, 4 கோடியே, 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்க திருவள்ளுர் மாவட்டத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆர்வமுடையோர், முதல் தலைமுறை இருபால் தொழில் முனைவோர்களும் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும்.மேலும், விபரங்களுக்கு, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, திருவள்ளுர் -- 602 003 என்ற முகவரியை அணுகுமாறு, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X