நடிகர் ஷாருக்கான் மகன் உட்பட எட்டு பேர் கைது!: சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்தி கும்மாளம்

Updated : அக் 05, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (10+ 79)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், போதைப் பொருள் தடுப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் விலை உயர்ந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில், பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான், 23, உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்.,
நடிகர் ஷாருக்கான்  மகன் உட்பட எட்டு பேர் கைது!: சொகுசு கப்பலில்  போதை விருந்து நடத்தி கும்மாளம்

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், போதைப் பொருள் தடுப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் விலை உயர்ந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில், பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான், 23, உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, தலைநகர் மும்பையில் இருந்து கோவா மாநிலம் வரை சொகுசு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்த சொகுசு கப்பல்களை இயக்குகின்றன. பிரமாண்டமான இந்த சொகுசு கப்பலில், ஐந்து நட்சத்திர ஓட்டலில் உள்ளதைப் போன்ற அறைகள், நீச்சல் குளம், மதுக் கூடம், உடற்பயிற்சி மையம், உள் அரங்கு விளையாட்டுகள் மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்று இருக்கும்.


ரகசிய தகவல்

இந்நிலையில், மும்பையில் இருந்து நேற்று முன்தினம் மாலை, 'கார்டிலியா' என்ற சொகுசு கப்பல் கோவா நோக்கி புறப்பட்டது. இதில், போதைப் பொருள் 'பார்ட்டி'க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசாரும் பயணியரைப் போல கப்பலுக்குள் நுழைந்தனர். கப்பல் புறப்பட்ட சில மணி நேரங்களில் நடுக்கடலை அடைந்ததும் விருந்து களைகட்டத் துவங்கியது. நள்ளிரவு வரை அமைதியாக காத்திருந்த போலீசார், அதிரடியாக சோதனையை துவங்கினர்.


விசாரணை

சொகுசு கப்பலில் இருந்த பயணியர் அனைவரிடமும் சோதனை நடத்தப்பட்டது. இதில், 'கொகைன், எக்ஸ்டசி, மெப்பட்ரோன், சராஸ் உள்ளிட்ட விலை உயர்ந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.விருந்தினர்களின் ஆடை கள், உள்ளாடைகள் மற்றும் கைப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான், தன் நண்பர்களுடன் அந்த கப்பலில் பயணம் செய்தார். அவரிடம் இருந்து, 13 கிராம் கொகைன், 21 கிராம் சரஸ் மற்றும் 22 எக்ஸ்டசி போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் முன்முன் தமேச்சா, நுபுர் சரிகா, இஸ்மீத் சிங், மோஹக் ஜஸ்வால், விக்ராந்த் சோக்கர், கோமித் சோப்ரா, அர்பாஸ் மெர்ச்சன்ட் உள்ளிட்ட எட்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இருவர் பெண்கள்.


அறிக்கை

இவர்கள் அனைவரையும், மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.''சட்ட நடைமுறைகள் முடிந்த பின், கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்,'' என, போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தெரிவித்தார்.

இந்த போதை விருந்து குறித்து, கார்டிலியா சொகுசு கப்பலை இயக்கும், 'வாட்டர்வேஸ் லீஷர் டூரிசம்' என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜர்கென் பெயிலோம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விபரம்:இந்த போதை விருந்துக்கும், எங்கள் நிறுவனத்துக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த தொடர்பும் இல்லை. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் டில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம், கார்டிலியா சொகுசு கப்பலை வாடகைக்கு எடுத்திருந்தது. அவர்கள் தான் இந்த விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இது போன்ற செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம். விசாரணையில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என உறுதி அளிக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


சொகுசு கப்பலில்மேலும் பல பிரபலங்கள்!மும்பை - கோவா சொகுசு கப்பலில் போதை விருந்து நடக்கப் போவது குறித்து, போலீசாருக்கு 15 நாட்களுக்கு முன்பே தகவல் கிடைத்துள்ளது. போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையில் அதிகாரிகள் தயாராகினர்.ஆனால், அந்த கப்பலில் பிரபலங்களும் இருப்பர் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கானைத் தவிர பல்வேறு துறை பிரபலங்களும் அந்த கப்பலில் இருந்ததாக கூறப்படுகிறது. 'அவர்களிடம் போதைப் பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படாததால், அவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


திசை திருப்பும் முயற்சி!

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம், அதானி நிறுவனத்தின் கட்டுப் பாட்டில் இயங்கி வருகிறது. இந்த துறைமுகத்தில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் சமீபத்தில் பிடிபட்டது. இந்த விவகாரத்தை மூடி மறைக்கவே, மும்பை சொகுசு கப்பலில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.

இது குறித்து, காங்., செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது கூறியதாவது:முந்த்ரா துறைமுகத்தில் ஹெராயின் கைப்பற்றப்பட்ட விவகாரத்தை திசை திருப்பவே, மும்பை சொகுசு கப்பலில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. முந்த்ரா துறைமுக விவகாரத்தில் இன்னும் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை. உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தண்டனை என்ன?

போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், நாடு முழுதும் 72 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருளுடன் பிடிபடும் நபர்களுக்கு இரண்டு விதமாக தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மற்றும் அதன் அளவின் அடிப்படையில் தண்டனை காலமும், அபராதமும் மாறுபடும். கஞ்சாவுக்கு ஒருவிதமாகவும், கொகைன் போன்ற இதர போதை மருந்துகளுக்கு வேறுவிதமாகவும் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.

தனி நபர் பயன்படுத்தும் அளவு போதைப் பொருள் வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களில் இருந்து, அதிகபட்சம் ஓராண்டு வரை சிறை தண்டனையும், 10 ஆயிரம் முதல், ௧ லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படுகின்றன.விற்பனை செய்வதற்காக, அதிக அளவிலான போதைப் பொருளுடன் சிக்குபவர்களுக்கு 10 - 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (10+ 79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-அக்-202120:23:19 IST Report Abuse
Saravanan டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்தில் தங்கம் கடத்துகிறார்கள் அதனால் இந்திராகாந்தி குடும்பத்துக்கும் கடத்தல் நபர்களுக்கும் தொடர்பு என்று சொல்லலாமா, தனியார் துறைமுகம் என்றால் அதுவும் அரசின் பாதுகாப்பில தானே வருது கடத்தலை பிடித்து இருக்கிறார்கள் என பெருமை படாமல் மோடியை குறை கூறும் கயவர் கூட்டத்தை என்ன சொல்வது, ஏன் சத்தம் போடாமல் விட்டிருக்க வேணுமா, காங்கிரஸ் ஆட்சியில போபால் விச வாயு விபத்துக்கு காரணமானவர்களை விட்டது மாதிரி அல்லது போபர்ஸ் வழக்கில் மாட்டிய குத்ரோச்சியை விட்டது மாதிரி...
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
04-அக்-202113:16:24 IST Report Abuse
Anand பாலிவுட் நடிகர்னா அப்படிதான் இருப்பர், அதுவும் சிறுபான்மை க்ரூப், அவர்களுக்கு அந்த உரிமை கூட கிடையாதா .......?
Rate this:
Cancel
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
04-அக்-202113:08:23 IST Report Abuse
R.PERUMALRAJA என்றைக்கு சரத்பவாரும் காங்கிரஸும் ஒழிகிறதோ அன்று தான் மும்பையும் போதை பொருளையும் ஒழிக்க முடியும் . கடத்தல் கும்பலும் கூட
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X