அப்பாவி மக்களிடம் அரசு நிலம் விற்பனை

Added : அக் 03, 2021
Share
Advertisement
சென்னை : சொந்த வீடு கனவில் தவிக்கும் அப்பாவி மக்களிடம், ஆளும் கட்சியினர் 'ஆசி'யுடன் அரசு நிலத்தை விற்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், வருவாய்த்துறை வேடிக்கை பார்க்கிறது.சென்னை மாதவரம் சட்டசபை தொகுதி மோரை ஊராட்சி, புதிய கன்னியம்மன் நகர் அருகே, அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு அரங்கேறி வருகிறது. கைவரிசைதினக்கூலி வருவாய் மூலம் தங்கள்

சென்னை : சொந்த வீடு கனவில் தவிக்கும் அப்பாவி மக்களிடம், ஆளும் கட்சியினர் 'ஆசி'யுடன் அரசு நிலத்தை விற்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், வருவாய்த்துறை வேடிக்கை பார்க்கிறது.

சென்னை மாதவரம் சட்டசபை தொகுதி மோரை ஊராட்சி, புதிய கன்னியம்மன் நகர் அருகே, அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு அரங்கேறி வருகிறது. கைவரிசைதினக்கூலி வருவாய் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை நகர்த்தி வரும் பலர், குடிசை வீடு என்றாலும், அது சொந்தமாய் இருக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளனர். அவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி, ஆளும் கட்சியின் உள்ளாட்சி மற்றும் கட்சி பதவி பொறுப்புகளில் உள்ள சிலர், தங்களின் 'கைவரிசை'யை காட்டி வருகின்றனர். இது கடந்த ஆட்சியிலும் நடந்தது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில், புதிய கன்னியம்மன் நகர் அருகே உள்ள அரசு நிலத்தில், 20 அடி அகலம், 25 அடி நீளம் உடைய, 500 சதுர அடி இடம், 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதற்குரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. அடிப்படை வசதிகளும் இல்லை. அந்த இடத்தை வாங்குவோர், முதலில் சிறு குடிசை அமைத்து, பிறகு கட்டடமாக உருவாக்கிக் கொள்கின்றனர். இப்படித்தான் அங்கு அரசு நிலம் 'தாரை' வார்க்கப்படுகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள், மாவட்ட வருவாய் துறையினரிடத்தில் புகார் செய்தாலும் கண்டுகொள்வதில்லை.இந்நிலையில் கடந்த மாதம் அங்கு, மோரை ஊராட்சி சார்பில் இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைத்தல், மரக்கன்று நடும் விழா ஆகியவை நடந்தன. அதில், பால்வளத்துறை அமைச்சர் நாசர், தொகுதி எம்.எல்.ஏ., சுதர்சனம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் மற்றும் வருவாய்த் துறையினர் பங்கேற்றனர்.அதனால், இங்கு குறைந்த பணத்தில் வீட்டு மனையும், அதற்கான அடிப்படை வசதிகளும் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அப்பாவி மக்கள் 'ஏமாற' முன்வருகின்றனர்.

இதனால், அங்கு நாளுக்கு நாள், அரசு நிலம் விற்பனை சூடு பிடித்துள்ளது. பட்டா, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட, 'அடிப்படை வசதிகள்' விரைவில் கிடைக்கும் என்று கூறி, ஆளும் கட்சியினர் வசூலில் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், அதே பகுதியில் மற்றொரு பாதிப்பும் தொடர்கிறது. மோரை அடுத்த பாலவேடு ஊராட்சியில், வண்டலுார்--மீஞ்சூர் வெளிவட்ட சாலைக்கு தேவையான நிலங்கள், ஐந்து ஆண்டுகளுக்கு முன் அரசால் கையகப்படுத்தப்பட்டன. நழுவிய அதிகாரிகள்அங்கு வீடுகளை இழந்த, 95 குடும்பத்தினருக்கு, மோரை ஊராட்சி புதிய கன்னியம்மன் நகர் அருகே, தலா 2.5 சென்ட் நிலத்தை, அப்போதைய அ.தி.மு.க., அரசு மாற்று இடமாக ஒதுக்கியது. அதில், ஜெ.ஜெ., நகரை உருவாக்கி, வீடுகளை கட்டி குடியேறியவர்களுக்கு உரிய ஆவண அங்கீகாரம் இல்லை என்பதால், இதுவரை மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. அவர்கள், சொந்தமாக மின் இணைப்பு பெற முடியாத நிலையில், தெரு விளக்குகளுக்கான மின்கம்பத்தில் 'கொக்கி' அடித்து மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் ஏராளமான யூனிட் மின் திருட்டும், அதனால் மின் வாரியத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இந்த பிரச்னைகளின் புகார், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் பார்வைக்கு சென்றாலும், கிணற்றில் போட்ட 'கல்' ஆக மூழ்கி விடுகிறது.அதனால், சொந்த வீடு கனவில் சிக்கிய அப்பாவி மக்கள், தங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைத்து விடும் என, ஆளும் கட்சியினரை நம்பி, தங்களது பணத்தை இழப்பதும் தொடர்கிறது.மேற்கண்ட பிரச்னைகள் குறித்து வருவாய், மின்சாரம், உள்ளாட்சி துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டால், இது குறித்து எந்த புகாரும் வரவில்லை என நழுவி விடுகின்றனர்.
யார் பொறுப்பு?
இந்த பிரச்னையில், அரசு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்தால், அப்பாவி மக்கள் தான் நடுத்தெருவுக்குச் செல்வர். அவர்களுக்கு மாற்று இடமும் கிடைக்காது. அவர்களுக்கு இழப்பீடு கிடைக்கவும், அவர்களை ஏமாற்றியோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். மேலும், புதிய ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் தடுக்கவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X