சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்., இடமாற்றம் தகாத உறவு காரணம்?

Added : அக் 03, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்து, போலீஸ் ஐ.ஜி., அலுவலக காத்திருப்பிற்கு மாற்றப்பட்ட முனிசேகரின் தகாத உறவு வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் முனிசேகர். கடந்த 2019ல், ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராமை பிடிக்க சென்ற போலீசாருடன், இவரும் அனுப்பப்பட்டார்.கொள்ளையனை பிடிக்க
 இன்ஸ்., இடமாற்றம்  தகாத உறவு காரணம்?


திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்து, போலீஸ் ஐ.ஜி., அலுவலக காத்திருப்பிற்கு மாற்றப்பட்ட முனிசேகரின் தகாத உறவு வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் முனிசேகர். கடந்த 2019ல், ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராமை பிடிக்க சென்ற போலீசாருடன், இவரும் அனுப்பப்பட்டார்.கொள்ளையனை பிடிக்க முனிசேகர் துப்பாக்கியால் சுட்டதில், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் இறந்தார். இந்த சர்ச்சையால், சென்னையிலிருந்து திருக்கழுக்குன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

முனிசேகரின் நேர்மை மற்றும் நடத்தை குறித்து அடிக்கடி புகார் எழுந்து வந்த நிலையில், கடந்த செப்., 27ல், வடக்கு மண்டல ஐ.ஜி., அலுவலக காத்திருப்பு பணியிடத்திற்கு, அதிரடியாக மாற்றப்பட்டார். அவரது இடமாற்றத்திற்கான காரணம் குறித்து, தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.சென்னை, பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்த திருமணமாகி, இரு குழந்தைகளுக்கு தாயான பெண், நெல்வாயில் உள்ள சகோதரி வீட்டிற்கு அடிக்கடி வந்துசென்றுள்ளார்.

அப்போது, அந்தப் பெண்ணுக்கும், முனிசேகருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரின் கணவர், மனைவியின் மொபைல் போனை சோதனை செய்துள்ளார். அப்போது, தன் மனைவியும், முனிசேகரும் ஆபாசமாக இருந்த வீடியோ இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, போலீஸ் டி.ஜி.பி., உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிக்கு, அந்தப் பெண்ணின் கணவர் புகார் அனுப்பியதை அடுத்து, முனிசேகர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
07-அக்-202100:41:59 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் இப்பலாம் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கலாச்சாரம் அபூர்வமா ஆயிருச்சு
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
04-அக்-202121:53:07 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy சகா போலீசை சுட்டது குற்றம் இல்லை. சட்டம் வேலை செய்யவில்லை.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
04-அக்-202121:17:26 IST Report Abuse
NicoleThomson ivanunga thappu pannaa idamaatram endra thandanai AIDS noyai vida kodumaiyaana thandanai
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X