போஸ்டர் களமாகும் பஸ் நிறுத்தம் | Dinamalar

'போஸ்டர்' களமாகும் பஸ் நிறுத்தம்

Added : அக் 03, 2021
Share
அரசின் கட்டுப்பாடுகளை கண்டுகொள்ளாமல், குரோம்பேட்டை பஸ் நிறுத்தத்தில், தனியார் போட்டி போட்டு விளம்பர 'போஸ்டர்'களை ஒட்டி வருகின்றனர்.குரோம்பேட்டை புறநகர் மின்சார ரயில் நிலையம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில், மினி பஸ், விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நின்று செல்வதற்கு, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதியால், தனியாக பஸ் நிறுத்தம்
 'போஸ்டர்' களமாகும் பஸ் நிறுத்தம்


அரசின் கட்டுப்பாடுகளை கண்டுகொள்ளாமல், குரோம்பேட்டை பஸ் நிறுத்தத்தில், தனியார் போட்டி போட்டு விளம்பர 'போஸ்டர்'களை ஒட்டி வருகின்றனர்.குரோம்பேட்டை புறநகர் மின்சார ரயில் நிலையம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில், மினி பஸ், விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நின்று செல்வதற்கு, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதியால், தனியாக பஸ் நிறுத்தம் கட்டப்பட்டது.

இந்த நிறுத்தத்தில், வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களும் நின்று செல்கின்றன.இந்த பஸ் நிறுத்த துாண்களிலும், சுவர்களிலும் அரசின் கட்டுப்பாட்டை கண்டுகொள்ளாமல், தனியார் விளம்பரங்கள் தினம் தினம் புதிது புதிதாக ஒட்டப்பட்டு வருகின்றன. அதேபோல், சிறுநீர் கழிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட அருவருக்கும் செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபடுகின்றனர். இது குறித்து, பயணியர் கேட்டால் தகராறு ஏற்படுகிறது.

இதேபோல் அருகில் உள்ள பழைய பஸ் நிறுத்தமும் போஸ்டர் மயமாகி உள்ளது. இந்த பஸ் நிறுத்தம், பல்லாவரம் நகராட்சி நிர்வாக கண்காணிப்பில் உள்ளது. அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், புதிது புதிதாக போட்டிபோட்டு விளம்பர போஸ்டர்கள் ஒட்டுவது தொடர்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X