அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: மக்களுக்கு வேண்டுகோள்

Updated : அக் 05, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். பெண்களுக்கு நகர பஸ்களில் இலவச பயண வசதி; ஆவின் பால் விலை, பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைப்பு; வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளோம். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில், பொங்கலுக்குள் ஒரு கோடி பேர் பலன் பெறுவர். தேர்தல்
உள்ளாட்சி தேர்தல்: மக்களுக்கு வேண்டுகோள்

சென்னை:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். பெண்களுக்கு நகர பஸ்களில் இலவச பயண வசதி; ஆவின் பால் விலை, பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைப்பு; வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளோம். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில், பொங்கலுக்குள் ஒரு கோடி பேர் பலன் பெறுவர்.

தேர்தல் நேரத்தில் என்னிடம் கொடுத்த பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களில், 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்தகைய விவேகமும், பொறுப்புணர்வும் உடைய அரசிற்கு, நீங்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். ஏராளமான திட்டங்களை வரிசையாக கொண்டு வர இருக்கிறோம்.

எவ்வளவு சிறந்த திட்டங்களை தீட்டினாலும், உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாகவே, அது மக்களை சென்று சேரும். எனவே, உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமைய, தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - sollamudiyatha naadu,இந்தியா
06-அக்-202108:38:45 IST Report Abuse
Baskar தமிழ்நாட்டில் எல்லாமே தந்திரமாக உள்ளது . எதை நம்புவது , எதை நம்ப கூடாது என்பது எளிய மக்களுக்கு புரியவில்லை . ஆதலால் சிந்திப்பதை தவிர்த்து அடுத்த ஆட்சிக்கு எதிர்பார்த்து இருக்கும் மக்கள் மக்கள் பேசவுது ஒன்று , செய்வது வேறாக உள்ளது .
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
04-அக்-202112:08:29 IST Report Abuse
duruvasar அவரே மனுவை வாங்கி அவரே தன்கையால் தீர்த்துவைத்த பெருமையும் அவருக்கே சேரும். காபி ராகத்தில் என்ன தவம் செய்தனை தயாளு என பாடல் இயற்ற மனம் ஏங்குகிறது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
04-அக்-202110:48:53 IST Report Abuse
RajanRajan இந்துகளின் எதிரியாக செயல்படும் திமுக ஆட்சி நமக்கு தேவையா என சிந்திக்க தூண்டும் பகிர்வு.....திராவிடனுக்கு ஓட்டு இனி இல்லை ஆன்லைனில் ஆலயத்திற்கு நன்கொடை அளிக்கலாம் என அறநிலைய அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்துக்களை ஆலய வழிபாட்டிற்கு அனுமதிக்காத அரசு நன்கொடை வசூலித்து கிருஸ்த்தவருக்கும், முஸிலிம்களுகாகு ஹஜ் யாத்திரைக்கும் போப்பை பாக்க போவோருக்கு இந்தகாசை கொடுக்க திட்டம் சாமி கும்பிட தடை ஆலயம் மூடல் நன்கொடை ஆன்லைனிலா வெட்ககேடு இந்துக்கள் சிந்தித்து செயல்படவும் ஏமாளிகள் இளிச்சவாயன் கேள் இந்துக்கள் என்பதை திராவிட அரசு முத்திரைகுத்தி வசூல் வேட்டை...🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X