வீரராகவன் ஏரியை புனரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

Added : அக் 03, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை : குரோம்பேட்டை, வீரராகவன் ஏரியில் உள்ள கழிவுகளை அகற்றி, அதை புனரமைப்பதற்கான முயற்சியில், மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. தனியார் மருத்துவமனை உதவியுடம், இத்திட்டதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குரோம்பேட்டை, நியுகாலனி பகுதியில், பல்லாவரம் - திருநீர்மலை உள்ளாட்சிகளின் எல்லையில், வீரராகவன் ஏரி அமைந்துள்ளது.பரங்கிமலை ஊராட்சி
 வீரராகவன் ஏரியை புனரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

குரோம்பேட்டை : குரோம்பேட்டை, வீரராகவன் ஏரியில் உள்ள கழிவுகளை அகற்றி, அதை புனரமைப்பதற்கான முயற்சியில், மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை உதவியுடம், இத்திட்டதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குரோம்பேட்டை, நியுகாலனி பகுதியில், பல்லாவரம் - திருநீர்மலை உள்ளாட்சிகளின் எல்லையில், வீரராகவன் ஏரி அமைந்துள்ளது.பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள, இந்த வேரியின் பரப்பளவு, 60 ஏக்கர். இதை நம்பி, குரோம்பேட்டை, கக்கலஞ்சாவடி பகுதிகளில் விவசாயம் நடந்து வந்தது.காலப்போக்கில், விவசாயம் குறைந்ததால், ஏரியை கண்டுக்கொள்ளாமல் விட்டனர்.

அதை சாதகமாக பயன்படுத்திய சமூக விரோதிகள், அப்பகுதியை ஆக்கிரமிக்க தொடங்கினர். லட்சுமி புரம், நியுகாலனி, கக்கலஞ்சாவடி என சுற்றி ஆக்கிரமித்து, குடியிருப்புகளை கட்டினர்.மற்றொரு புறம், லட்சுமி புரம், துர்கா நகர், நியுகாலனி பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், அரசு மருத்துவமனை கழிவு நீர், ஏரியில் பல ஆண்டுகளாக கலக்கிறது. தொடர் ஆக்கிரமிப்பால், ஏரியின் மதகு காணாமல் போனது. வரத்து கால்வாய்கள் மாயமாகி விட்டன. ஏரி, குட்டையாக சுருங்கி, கழிவு நீர் தேக்கமாகவும், முழுதும் ஆகாயத் தாமரை வளர்ந்தும் மூடிவிட்டது.

பொதுமக்கள், சமூக ஆர்வலர்களை இணைத்து, நெமிலிச்சேரி ஏரி புனரமைக்கப்பட்டது போல், மெல்ல, மெல்ல மாயமாகி வரும், வீரராகவன் ஏரியை சுத்தப்படுத்தி, அதை புனரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.சில வாரங்களுக்கு முன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், இந்த ஏரியை நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் தேவையான விவரங்களை கேட்டறிந்தார்.இதைத்தொடர்ந்து, குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை வாயிலாக, இந்த ஏரியை புனரமைக்க, மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X