பொது செய்தி

தமிழ்நாடு

வருமான உச்ச வரம்பை உயர்த்த வேண்டும்:கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி:"அரசின் நலத்திட்ட உதவிகளை, ஏழை, எளிய மக்கள் பெற, வருமான உச்சவரம்பை, ரூ. 1 லட்சமாக உயர்த்த வேண்டும்" என, கிட்டாம்பாளையம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.காந்தி ஜெயந்தியை யொட்டி, சூலுார், சுல்தான்பேட்டை வட்டாரத்தில், உள்ள, 37 ஊராட்சிகளில், 34 ஊராட்சிகளில் நேற்று முன்தினம் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.கிட்டாம்பாளையம்பாளையம் ஊராட்சியில்,

கருமத்தம்பட்டி:"அரசின் நலத்திட்ட உதவிகளை, ஏழை, எளிய மக்கள் பெற, வருமான உச்சவரம்பை, ரூ. 1 லட்சமாக உயர்த்த வேண்டும்" என, கிட்டாம்பாளையம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.காந்தி ஜெயந்தியை யொட்டி, சூலுார், சுல்தான்பேட்டை வட்டாரத்தில், உள்ள, 37 ஊராட்சிகளில், 34 ஊராட்சிகளில் நேற்று முன்தினம் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

கிட்டாம்பாளையம்பாளையம் ஊராட்சியில், தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஊராட்சியை கருமத்தம்பட்டியுடன் இணைக்கக் கூடாது. ஏழை மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து பெற்றிட, வருமான உச்சவரம்பை, ரூ. 72 ஆயிரத்தில் இருந்து, ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நொய்யல் கழிவு நீர்
* அரசூரில் ஊராட்சி தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், அரசூரில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். நொய்யல் கழிவு நீரை சுத்திகரித்து நீர் நிலைகளுக்கு விட வேண்டும். அனுமதி பெறாத, விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்களை அகற்றப்படும். ஊராட்சியில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிப்பு என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* கணியூர் ஊராட்சியில், தலைவர் வேலுசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், சங்கோதிபாளையத்தில், சாக்கடை கால்வாய் கட்டுதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* சுல்தான்பேட்டை ஒன்றியம், கள்ளப்பாளையத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், தலைவர் கணேசனிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர். அதில், ஊராட்சியில் உள்ள குட்டைகளில் குடிமராமத்து பணிகள் நடந்த போது, அளவுக்கு அதிகமாக, கிராவல் மண் எடுக்கப்பட்டதால், கரைகள் பலவீனமடைந்துள்ளன.
சட்டவிரோதமாக அனுமதிக்கப்பட்ட அளவை விட, மண் எடுக்கப்பட்டது குறித்து விசாரித்து உண்மை நிலையை கண்டறிந்து, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கோரப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X