மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி கண்ணகி நகரில் பரிசோதனை முகாம் | Dinamalar

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி கண்ணகி நகரில் பரிசோதனை முகாம்

Added : அக் 03, 2021
Share
கண்ணகிநகர் :: மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான பரிசோதனை முகாம், கண்ணகிநகரில், இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெற உள்ளன.மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு தேசிய நிறுவனம், சத்ய சாய் சேவா நிறுவனங்கள், கண்ணகிநகர் அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் மற்றும் கண்ணகிநகர் காவல் நிலையம் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான, பரிசோதனை முகாம்

கண்ணகிநகர் :: மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான பரிசோதனை முகாம், கண்ணகிநகரில், இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெற உள்ளன.

மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு தேசிய நிறுவனம், சத்ய சாய் சேவா நிறுவனங்கள், கண்ணகிநகர் அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் மற்றும் கண்ணகிநகர் காவல் நிலையம் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான, பரிசோதனை முகாம் நடத்துகிறது.கண்ணகிநகர் துவக்கப் பள்ளியில், இன்று முதல் 8ம் தேதி வரை, தினமும் காலை 9:00 முதல் 2:00 மணி வரை, முகாம் நடைபெறும். இதில், மூன்று சக்கர சைக்கிள், கேலிபர், ஊன்றுகோல், காதுகேட்கும் கருவி, பிரெய்லி கிட் போன்று உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.

இன்றும், நாளையும் கை, கால் மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம் நடைபெறும். 7ம் தேதி, மனவளர்ச்சி மற்றும் காதுகேளாமை மாற்றுத்திறனாளிகள்; 8ம் தேதி, பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெறும்.இது குறித்து, முகாம் ஒருங்கிணைப்பாளர் சாய்ராம் கூறியதாவது: முகாமில் பங்கேற்போர், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, வருமான சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் வர வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளர்களுக்கு, உபகரணங்கள் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 98455 40780 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X