பொது செய்தி

தமிழ்நாடு

ஆழ்துளை கிணறுக்கு அனுமதி விவகாரம்: அசோகபுரத்தில் காரசார விவாதம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே அசோகபுரம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், ஆழ்குழாய் கிணறு விவகாரம் தொடர்பாக, காரசார விவாதம் நடந்தது.அசோகபுரம் ஊராட்சியில், கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற பொது மக்களில் ஒரு பகுதியினர், 'நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைவதால், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஆழ்குழாய் கிணறு அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது' என்றனர்.ஆனால்,

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே அசோகபுரம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், ஆழ்குழாய் கிணறு விவகாரம் தொடர்பாக, காரசார விவாதம் நடந்தது.அசோகபுரம் ஊராட்சியில், கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற பொது மக்களில் ஒரு பகுதியினர், 'நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைவதால், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஆழ்குழாய் கிணறு அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது' என்றனர்.ஆனால், ஊராட்சி நிர்வாகத்தினர், ஆழ்குழாய் கிணறு போட, அரசு அனுமதி உள்ளது என்றனர்.
இதையடுத்து, அனுமதி தொடர்பான ஆவணத்தை கிராமசபை கூட்டத்தில் அளிக்க, மக்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக, காரசார விவாதம் நடந்தது.தொடர்ந்து, தீர்மானங்களை, மினிட் நோட்டில் தான் எழுத வேண்டும் எனவும், தனி பேப்பரில் விதிகளுக்கு முரணாக எழுதக்கூடாது என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி, தீர்மானங்கள் நோட்டில் எழுதப்பட்டன. ஊராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், துணைத் தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* வீரபாண்டி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில், மலைவாழ் பழங்குடியின மக்கள், தங்களுடைய சொந்த விவசாய நிலங்கள் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அதை மீட்டு, மீண்டும் தங்களிடமே வழங்க வேண்டும் எனக்கூறி, மனு அளித்தனர்.
* சோமையம்பாளையம் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில், ஊராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதேபோல, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை கிராம ஊராட்சி சார்பில் கிராம சபைக்கூட்டம் நடந்தன. இக்கூட்டங்களில், திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X