பொது செய்தி

தமிழ்நாடு

சூறாவளி காற்றுக்கு வாழைகள் சேதம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில், நேற்று முன்தினம் வீசிய சூறாவளி காற்று மற்றும் கனமழைக்கு, சுமார் 5 ஆயிரம் வாழைகள், சேதமடைந்துள்ளன. ஒருவர் காயம் அடைந்தார்.மேட்டுப்பாளையத்தில், நேற்று முன்தினம் மழையுடன், சூறாவளி காற்று வீசியது. இதனால், வெள்ளிப்பாளையம் பகுதியில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.இப்பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட
 சூறாவளி காற்றுக்கு வாழைகள் சேதம்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில், நேற்று முன்தினம் வீசிய சூறாவளி காற்று மற்றும் கனமழைக்கு, சுமார் 5 ஆயிரம் வாழைகள், சேதமடைந்துள்ளன. ஒருவர் காயம் அடைந்தார்.மேட்டுப்பாளையத்தில், நேற்று முன்தினம் மழையுடன், சூறாவளி காற்று வீசியது. இதனால், வெள்ளிப்பாளையம் பகுதியில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.இப்பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.
இதுகுறித்து விவசாயி மகேந்திரன் கூறுகையில், ''இப்பகுதியில், பெரும்பாலான விவசாயிகள் நேந்திரன், கதலி ரக வாழை பயிர் செய்துள்ளனர். வாழைத்தார்கள் இரண்டு மாதங்களில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தன. இந்நிலையில் இரவு வீசிய சூறாவளி காற்றால், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X