பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியுடன் இணைக்க விவசாயிகள் கோரிக்கை

Added : அக் 03, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள, கூடலுார் கவுண்டம்பாளையம் பேரூராட்சி யுடன், நாயக்கன்பாளையம் ஊராட்சியை இணைக்க வேண்டும் என, கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., விவசாயிகள் அணியினர், கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.'கூடலுார் கவுண்டம்பாளையம் பேரூராட்சி, நகராட்சியாக மாற்றப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பான, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்து

பெ.நா.பாளையம்:நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள, கூடலுார் கவுண்டம்பாளையம் பேரூராட்சி யுடன், நாயக்கன்பாளையம் ஊராட்சியை இணைக்க வேண்டும் என, கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., விவசாயிகள் அணியினர், கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.'கூடலுார் கவுண்டம்பாளையம் பேரூராட்சி, நகராட்சியாக மாற்றப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்து வருகிறது. புதிதாக உருவாகவுள்ள நகராட்சியுடன், நாயக்கன்பாளையம் ஊராட்சியை இணைப்பதால், ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், அரசு அதிக நிதி ஒதுக்கி, பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்ய முடியும். தற்போது, நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கோவனுார்புதுார் உள்ளிட்ட பகுதிகளில், பொது சுகாதார கழிப்பிடம் இல்லை.அதை அரசு கட்டித்தர வேண்டும். மேலும், இப்பகுதியில் தினசரி, காட்டு யானைகளின் தொந்தரவு இருப்பதால், இப்பிரச்னைக்கு தீர்வு காண, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X