பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஆய்வு

Added : அக் 03, 2021
Share
Advertisement
பெசன்ட்நகர் : வேளச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த, கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை, சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி பார்வையிட்டார்.கொரோனா பரவலை தடுக்க, 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட வேண்டும் என, அரசு வலியுறுத்தி உள்ளது.இதற்காக, ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.நேற்று, நான்காவது 'மெகா' தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
 தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஆய்வு

பெசன்ட்நகர் : வேளச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த, கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை, சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி பார்வையிட்டார்.

கொரோனா பரவலை தடுக்க, 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட வேண்டும் என, அரசு வலியுறுத்தி உள்ளது.இதற்காக, ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.நேற்று, நான்காவது 'மெகா' தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அடையாறு, பெசன்ட்நகர், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் பகுதியில் நடந்த முகாம்களை, சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி பார்வையிட்டார்.

தடுப்பூசி போட வந்த பொதுமக்களிடம், ஊசி போட்டாலும் முக கவசம் அணிவதுடன், கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை பின்பற்ற வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.தொடர்ந்து, முகாம் நடைபெறும் இடங்களில் உள்ள வசதிகளை பார்வையிட்டார். ஊழியர்களிடம், பொதுமக்களின் வரவேற்பு குறித்து கேட்டறிந்தார். உடன், வேளச்சேரி தாசில்தார் மணிசேகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X