பதவி தப்பியதால் மே.வ., முதல்வர் மம்தா பானர்ஜி...நிம்மதி!: பவானிபூர் தொகுதியில் 85,000 ஓட்டு வாங்கி வெற்றி

Updated : அக் 04, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (20+ 46)
Share
Advertisement
கோல்கட்டா:மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை இடைத் தேர்தலில், பவானிபூர் தொகுதியில் 85 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வென்றார். முதல்வர் பதவி தப்பியதால், அவர் நிம்மதி அடைந்துள்ளார்.தமிழகம், மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு மார்ச், ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி
பதவி தப்பியதால் மே.வ., முதல்வர் மம்தா பானர்ஜி...நிம்மதி!: பவானிபூர் தொகுதியில்  85,000 ஓட்டு வாங்கி  வெற்றி

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை இடைத் தேர்தலில், பவானிபூர் தொகுதியில் 85 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வென்றார். முதல்வர் பதவி தப்பியதால், அவர் நிம்மதி அடைந்துள்ளார்.

தமிழகம், மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு மார்ச், ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, திரிணமுல் காங்., ஆட்சியை தக்க வைத்தது.

திரிணமுல் காங்.,கில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், மூன்றாவது முறையாக அவர் முதல்வராக பொறுப்பேற்றார்.


இரண்டு முறை வெற்றி

பதவியேற்றதில் இருந்து, ஆறு மாதங்களுக்குள் சட்டசபைக்கு மம்தா பானர்ஜி தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், மம்தா பானர்ஜி தொடர்ந்து இரண்டு முறை வென்ற பவானிபூர் தொகுதியில் வெற்றி பெற்ற, மாநில அமைச்சரான சோபன்தேவ் சட்டோபாத்யாயா, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, பவானிபூர் உட்பட மேற்கு வங்கத்தில் காலியாக இருந்த மூன்று தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத் தேர்தல் நடந்தது. இதில், பவானிபூர் தொகுதியில் திரிணமுல் சார்பில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.இடைத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. துவக்கத்தில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலையில் இருந்து வந்தார்.

மொத்தம் நடந்த 21 சுற்று எண்ணிக்கைக்குப் பின், 58 ஆயிரத்து 832 ஓட்டுகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வென்றார். முதல்வர் பதவி தப்பியதால் அவர் நிம்மதி அடைந்துள்ளார்.இந்த இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு, 85 ஆயிரத்து 263 ஓட்டுகள் கிடைத்தன.


தகுந்த பதிலடி

அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் பிரியங்கா திப்ரேவாலுக்கு, 26 ஆயிரத்து 428 ஓட்டுகள் கிடைத்தன. மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த ஸ்ரீஜிப் பிஸ்வாசுக்கு, 4,226 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது:

சட்டசபை தேர்தல் நடந்து முடிந்ததில் இருந்தே, என்னை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசு சதி செய்தது. சட்டசபை தேர்தலில் நந்திகிராமில் சதி செய்து, என்னை தோற்கடித்துவிட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை.

என் மீது நம்பிக்கை வைத்து மேற்கு வங்க மக்களும், பவானிபூர் மக்களும் வெற்றியை அளித்துள்ளனர்; அவர்களுக்கு நன்றி. குறிப்பிட்ட ஆறு மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்திய தேர்தல் கமிஷனுக்கும் நன்றி.நந்திகிராம் தேர்தல் முடிவுக்கு, பவானிபூர் மக்கள் தகுந்த பதிலடியை கொடுத்துள்ளனர். முதல் முறையாக தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் நமக்கு வெற்றி கிடைத்துள்ளது. மேலும், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி என்ற சாதனையும் படைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


பிஜு ஜனதா தளம் வெற்றி

''மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன். மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துகள். கள்ள ஓட்டு போட்டு அவரை வெற்றி பெற வைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதை, ஓட்டுப் பதிவின் போதே நான் வெளிப்படுத்தினேன்,'' என, பா.ஜ., வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் கூறியுள்ளார். இடைத் தேர்தல் நடந்த முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சம்சேர்கஞ்ச், ஜாங்கிபுர் தொகுதிகளிலும் திரிணமுல் காங்., வேட்பாளர்கள் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றனர்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வர் பதவியை தக்க வைத்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஒடிசா மாநிலம் பிப்லி சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றது.


கொண்டாட்டத்துக்கு தடை!

மேற்கு வங்கத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.இதையடுத்து இடைத் தேர்தல் முடிவு வெளியான பின், வன்முறை ஏற்படுவதை தடுக்கும் வகையில் வெற்றி கொண்டாட்டங்கள் நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யும்படி, மாநில தலைமைச் செயலர் எச்.கே.திவேதிக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இடைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின், வன்முறை சம்பவங்கள் நடப்பதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு உத்தரவிடும்படி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, பா.ஜ., வேட்பாளர் பிரிங்கா திப்ரேவாலும் கடிதம் எழுதியிருந்தார்.இருப்பினும் மம்தா பானர்ஜியின் வெற்றியை, திரிணமுல் காங்., தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கோலாகலமாக கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து (20+ 46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
04-அக்-202120:01:57 IST Report Abuse
NicoleThomson அய்யா அது எழுதுகையில் பபானி என்று எழுதுகிறார்கள் ஒருவேளை மேகதாது போன்று இங்கேயும் பவானி ஆயிட்டங்களா?
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
04-அக்-202114:55:23 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN பின்ன? ஒட்டு போடலேன்னா மிகப்பெரிய வன்முறையை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற பயம் பவானிப்பூர் வாக்காளர்களுக்கு இருக்காதா? நம்மை விட அவர்கள் சொர்ணாக்காவ நன்கு அறிந்தவர்கள்
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
04-அக்-202120:22:04 IST Report Abuse
Mirthika Sathiamoorthiநம்ம ஜெய மாதிரி இருக்க தெரியலை...safe ஆ ரெண்டு தொகுதியில நின்னு ஒன்னை ராஜினாமா பண்ணும் அந்த சூச்சமம் தெரியலை...வன்முறை வரும்ன்னு பயத்தைவிட அதிலிருந்து நம்மை காப்பாத்தாது ஒருகட்சிங்கிற அவநம்பிக்கை கூட அந்த கட்சிக்கு மக்கள் ஓட்டுபோட்டிருக்க மாட்டாங்க இல்லையா? நீங்கமட்டும் ரூம் போட்டு யோசிபீங்களோ?...
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
04-அக்-202121:29:58 IST Report Abuse
Dhurveshஎத்துணை நாள் தான் எத்துணை தடவை தான் உதை வாங்குவீங்க வெட்கம் இல்லை...
Rate this:
Cancel
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
04-அக்-202113:15:30 IST Report Abuse
R.PERUMALRAJA பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் னுக்கு இருக்கும் கோமாளி ரசிகர்கள் போல இந்த வயதான கோமாலியிற்கு இருக்கும் நாலு தொண்டர்களை கட்டுப்படுத்த தெரியாத ப ஜா க ...நாலு சாராய வியாபாரிகளின் தொடர்பு தான் தேவை ப .ஜா க விற்கு ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X