பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பு பணி ரயில்கள் ரத்து

Added : அக் 03, 2021
Share
Advertisement
சென்னை ; ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், தாம்பரம் - சில்காட் வாராந்திர ரயில் உட்பட, எட்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.தாம்பரத்தில் இருந்து, அசாம் மாநிலம், சில்காட் டவுனுக்கு, இன்று காலை 10:05 மணிக்கும், சில்காட் டவுன் நிலையத்தில், தாம்பரத்துக்கு வரும், 8ம் தேதி காலை 10:05 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து,

சென்னை ; ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், தாம்பரம் - சில்காட் வாராந்திர ரயில் உட்பட, எட்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தாம்பரத்தில் இருந்து, அசாம் மாநிலம், சில்காட் டவுனுக்கு, இன்று காலை 10:05 மணிக்கும், சில்காட் டவுன் நிலையத்தில், தாம்பரத்துக்கு வரும், 8ம் தேதி காலை 10:05 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து, பெரம்பூர் வழியாக, கர்நாடகா மாநிலம் பெங்களூர் கன்டோன்மென்டுக்கு இன்று காலை 6:20 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் பெங்களூர் கன்டோன்மென்ட்டில் இருந்து, வரும் 7ம் தேதி இரவு 11:40 மணிக்கு கவுஹாத்திக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன

அசாம் மாநிலம், சில்சார் நிலையத்தில் இருந்து, பெரம்பூர் வழியாக கோவைக்கு, வரும் 5ம் தேதி இரவு 8:10 மணிக்கும், கோவையில் இருந்து, சில்சாருக்கு வரும் 10ம் தேதி, இரவு 9:45 மணிக்கு இயக்கப்படும் சில்சார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனபெங்களூர் கன்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து, பெரம்பூர் வழியாக, திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு வரும் 5ம் தேதி, காலை 10:15 மணிக்கும், அகர்தலாவில் இருந்து பெங்களூரு கன்டோன்மென்ட்டுக்கு, வரும் 9 ம் தேதி அதிகாலை, 5:55 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X