குடிநீருக்கு தவிக்கிறோம்: பொதுமக்கள் சரமாரி புகார்

Added : அக் 03, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்:'குடிநீர் கிடைக்காமல் தவிக்கிறோம்' என, கிராம சபை கூட்டத்தில், மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சியில், கிராம சபை கூட்டம், ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், லட்சுமி கார்டன் பகுதி மக்கள் பேசுகையில், 'எங்கள் பகுதிக்கு, 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருகிறது.

கோவில்பாளையம்:'குடிநீர் கிடைக்காமல் தவிக்கிறோம்' என, கிராம சபை கூட்டத்தில், மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சியில், கிராம சபை கூட்டம், ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், லட்சுமி கார்டன் பகுதி மக்கள் பேசுகையில், 'எங்கள் பகுதிக்கு, 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அதிக விலைக்கு வாங்குகிறோம். நீண்ட தொலைவுக்கு சென்று குடிநீர் எடுத்து வருகிறோம்.

எங்கள் பகுதியில் குப்பைகளை உடனுக்குடன் அகற்றாததால் மலை போல் தேங்கி நிற்கிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது' என, சரமாரியாக புகார் தெரிவித்தனர்.ஊராட்சி தலைவர் பதிலளிக்கையில், "2011 மக்கள் தொகை அடிப்படையில் குடிநீர் வடிகால் வாரியம், நமது ஊராட்சிக்கு குடிநீர் வழங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை, 30 ஆயிரத்தை எட்டி விட்டது. ஆனால், 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே குடிநீர் ஒதுக்குகின்றனர்.
அதிக அளவில் குடிநீர் ஒதுக்கும்படி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற கூடுதல் தொழிலாளர்கள் நியமிக்கப்படுவர்' என்றார்.கூட்டத்தில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார், ஒன்றிய சேர்மன் கவிதா சண்முகசுந்தரம், ஊராட்சி துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X