பொது செய்தி

தமிழ்நாடு

ஏலச் சீட்டு மோசடியால் பாதித்தவர்களுக்கு பணம் திருப்பி செலுத்த கமிஷனர் நியமனம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
சென்னை ; ஏலச்சீட்டு மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பணத்தை திருப்பி செலுத்தும் நடவடிக்கைக்காக, ஓய்வு பெற்ற நீதிபதியை, ஆணையராக நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில், 'அம்பத்துார் நாடார்கள் தர்ம பரிபாலன சங்கம்' உள்ளது. இந்த சங்கம் சார்பில், ஏலச் சீட்டு நடத்தப்பட்டது. அதில், பலர் 'டிபாசிட்' செய்தனர். சங்க நிர்வாகிகளுக்கு இடையே பிரச்னை

சென்னை ; ஏலச்சீட்டு மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பணத்தை திருப்பி செலுத்தும் நடவடிக்கைக்காக, ஓய்வு பெற்ற நீதிபதியை, ஆணையராக நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில், 'அம்பத்துார் நாடார்கள் தர்ம பரிபாலன சங்கம்' உள்ளது. இந்த சங்கம் சார்பில், ஏலச் சீட்டு நடத்தப்பட்டது. அதில், பலர் 'டிபாசிட்' செய்தனர். சங்க நிர்வாகிகளுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, பணத்தை திருப்பி தரும்படி, டிபாசிட்தாரர்கள் கேட்டனர். சிலருக்கு, பாதி பணம் திருப்பி கொடுக்கப்பட்டது.சங்க நிர்வாகிகளுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி, சங்க செயலர், துணை தலைவர், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'டிபாசிட்தாரர்களுக்கு தர வேண்டிய பணத்தை, திருப்பி செலுத்தி விடுவர்' என்றார்.மனுதாரர்களுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி, நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவு:பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக, மனுதாரர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிபாசிட்தாரர்களுக்கு பணம் கிடைக்க ஏதுவாக, ஓய்வு பெற்ற நீதிபதியை, ஆணையராக நியமிப்பது என, முடிவு செய்யப்படுகிறது.

எனவே, ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன், ஆணையராக நியமிக்கப்படுகிறார். பணம் டிபாசிட் செய்தவர்கள், உரிய ஆவணங்களுடன், ஆணையருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவற்றை சரிபார்த்து, டிபாசிட்தாரர்களுக்கான பணத்தை அவர் வழங்குவார். டிபாசிட்தாரர்களுக்கு வழங்க வேண்டிய தொகை மற்றும் உரிய ஆவணங்களை, ஆணையரிடம் மனுதாரர்கள் வழங்க வேண்டும்.டிச., 1க்குள், உரிய ஆதாரங்களுடன் டிபாசிட் தொகையை கேட்டு விண்ணப்பிக்கும்படி, பொது அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். விண்ணப்பங்களை பெற்று, பரிசீலித்து, பணம் வழங்கும் நடவடிக்கையை, மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X