பொது செய்தி

தமிழ்நாடு

நல்ல வாய்ப்பை பயன்படுத்துங்க ஊராட்சிகளே! மழை நீரை சேமிக்க கோரிக்கை

Added : அக் 03, 2021
Share
Advertisement
அன்னுார்:பருவமழை சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில், நீர்நிலைகளுக்கு, மழை நீர் வரும் பாதைகளை உடனடியாக சீரமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.அன்னுார் வட்டாரத்தில், அன்னுாரில், 119 ஏக்கர் குளமும், காட்டம்பட்டியில் 140 ஏக்கர் குளமும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. தவிர, 5 ஏக்கர் முதல் 80 ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட, 50 குளங்கள் உள்ளன. மேலும், சுமார் 150 குட்டைகள் உள்ளன.குளம்,
 நல்ல வாய்ப்பை பயன்படுத்துங்க ஊராட்சிகளே! மழை நீரை சேமிக்க கோரிக்கை

அன்னுார்:பருவமழை சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில், நீர்நிலைகளுக்கு, மழை நீர் வரும் பாதைகளை உடனடியாக சீரமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.அன்னுார் வட்டாரத்தில், அன்னுாரில், 119 ஏக்கர் குளமும், காட்டம்பட்டியில் 140 ஏக்கர் குளமும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. தவிர, 5 ஏக்கர் முதல் 80 ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட, 50 குளங்கள் உள்ளன. மேலும், சுமார் 150 குட்டைகள் உள்ளன.
குளம், குட்டைகளுக்கு மழைநீர் வரும் பாதை பெரும்பாலான ஊர்களில், மண்மேடுகள், குப்பைகள், புதர்கள், செடிகள் ஆகியவற்றால் தடைபட்டு உள்ளன. குறிப்பாக அன்னுார் குளத்திற்கு ஒட்டர்பாளையம் ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் இருந்து மழைநீர் வரும் வழித்தடங்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் தடைபட்டுள்ளன.
ஊராட்சி மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, குளங்களுக்கு மழைநீர் வரும் பாதைகளில் மண்மேடுகள், புதர்கள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்.இதேபோல், ஊராட்சிகளிலும், ஊராட்சி நிர்வாகங்கள், தங்கள் பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு, மழை நீர் வரும் பாதையில் இயந்திரங்கள் மற்றும் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் வாயிலாக பராமரிப்பு பணி செய்தால், குளம், குட்டைகளில் நீர் நிரம்பும்.இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயரும். கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்துக்கு உதவியாக இருக்கும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X