சில வரி செய்திகள்

Added : அக் 03, 2021
Share
Advertisement
காங்., -- எம்.எல்.ஏ., கைது கவுகாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமின் தர்ராங் மாவட்டத்தில், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றியபோது மோதல் உருவானது. இது குறித்து, வகுப்புவாதத்தை துாண்டும் வகையில் சில கருத்துகளை, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஷெர்மன் அலி அகமது கூறினார். இதற்கு விளக்கம் கோரி, காங்., தரப்பில் அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதற்கிடையே, இவரது கருத்துகள் தொடர்பான புகாரின்

காங்., -- எம்.எல்.ஏ., கைது

கவுகாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமின் தர்ராங் மாவட்டத்தில், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றியபோது மோதல் உருவானது. இது குறித்து, வகுப்புவாதத்தை துாண்டும் வகையில் சில கருத்துகளை, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஷெர்மன் அலி அகமது கூறினார். இதற்கு விளக்கம் கோரி, காங்., தரப்பில் அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதற்கிடையே, இவரது கருத்துகள் தொடர்பான புகாரின் அடிப்படையில், தேச துரோக வழக்கு பதிவு செய்த போலீசார், எம்.எல்.ஏ., ஷெர்மன் அலியை கைது செய்தனர்.

டில்லிக்கு பசுமை நிதி

புதுடில்லி: டில்லியில் காற்று மாசு அதிகரித்து உள்ளது. இதை குறைப்பதற்கான பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வை ஈடு செய்வதற்காக, மத்திய அரசின் தேசிய துாய்மை காற்று திட்டத்தின் கீழ், 18.74 கோடி ரூபாய் பசுமை நிதி வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் 2019ல் துவங்கப்பட்ட பின், டில்லிக்கு முதன் முறையாக இந்த நிதி கிடைக்க உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

கூகுளில் 93,550 பதிவுகள் நீக்கம்

புதுடில்லி: நம் நாட்டில் இணையதளம் பயன்படுத்துவோரிடம் இருந்து, கடந்த மாதம் 35 ஆயிரத்து 191 புகார்களை, 'கூகுள்' நிறுவனம் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் பதிப்புரிமை, வர்த்தக முத்திரை, உரிமை மீறல் உட்பட பல்வேறு வகைகளில் 93 ஆயிரத்து 550 பதிவுகளை நீக்கியதாக அந்நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கை கூறுகிறது. இதே காலத்தில், தேவையற்ற மற்றும் முறைகேடான ஆறு லட்சத்து 51 ஆயிரத்து 933 பதிவுகளை தாங்களே கண்டறிந்து அகற்றி உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண்ணை தாக்கிய போலீஸ்

ரூர்கேலா: கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி அனிதாராஜ் ஷிரஹட்டி, 30. இவர் நேற்று முன்தினம் ஒடிசாவின் ரூர்கேலாவில் ரயிலில் பழங்கள் விற்றுள்ளார். 'டிக்கெட்' இல்லாததால் அவரை, ஆர்.பி.எப்., எனப்படும் ரயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் அஜித் நாயக் தாக்கியுள்ளார். இது குறித்து அஜித் நாயக் மீது, ரூர்கேலா ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மோசடி வழக்கில் காங்., தலைவர்?

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் பெயரிலான அறக்கட்டளை சொத்துக்களை முறைகேடு செய்ததாக, கண்ணுார் எம்.பி.,யும், காங்., மாநில தலைவருமான சுதாகரன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது குறித்து விசாரித்த உளவுத் துறை, புகார் தொடர்பாக, எம்.பி., மீதான மேல் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது குறித்து சுதாகரன் கூறும்போது, ''நான் கறைபடியாத அரசியல்வாதி. எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார்,'' என்றார்.

வெள்ளிக்கட்டிகளுடன் 3 பேர் கைது

கிரிடிஹ்: ஜார்க்கண்டின் கிரிடிஹ் மாவட்டம் முபாசில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, காரில் கடத்தி வந்த 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 73 வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மூவர் கைதானதுடன், தலைமறைவான முக்கிய குற்றவாளி ராஜேஷ் குப்தாவை, போலீசார் தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X