பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்பேட்டைக்கு எதிர்ப்பு : உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு

Added : அக் 03, 2021
Share
Advertisement
அன்னுார்:மாவட்ட கவுன்சிலர் தேர்தலை புறக்கணிப்பது என, இரு கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழக அரசின் 'டிட்கோ' மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு, அன்னுார் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாக்களில் ஆறு ஊராட்சிகளில், 3,800 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்க முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி

அன்னுார்:மாவட்ட கவுன்சிலர் தேர்தலை புறக்கணிப்பது என, இரு கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழக அரசின் 'டிட்கோ' மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு, அன்னுார் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாக்களில் ஆறு ஊராட்சிகளில், 3,800 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்க முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குப்பனுார் ஊராட்சியில், சொலவம்பாளையம் மற்றும் ஆலாங்குட்டையில் விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்ற ஊர்க் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் பேசிய விவசாயிகள், தொழில்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், நேரில் தெரிவித்தும் இத்திட்டத்தை வாபஸ் பெறுவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.எனவே, இரண்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தொழிற்பேட்டை அமைப்பதை எதிர்த்து வரும் 9ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட கவுன்சிலர் தேர்தலை புறக்கணிப்பது என, அறிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X