பொது செய்தி

தமிழ்நாடு

காலிமனைகளால் சுகாதார சீர்கேடு

Added : அக் 03, 2021
Share
Advertisement
சோழிங்கநல்லுார் : மண்டலம், 197 வது வார்டு, ஒ.எம்.ஆர்., காரப்பாக்கம் பகுதியில், ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்குள்ள, சில பகுதியில் காலி மனைகள் உள்ளன.இதில், சிலர் குப்பை கொட்டுகின்றனர். சுற்றுவட்டார பகுதியில் உள்ள கழிவு நீர், காலி மனைகளில் விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நாள்பட்ட கழிவுநீரில், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால், சுற்றி வசிப்போர் துாக்கத்தை

சோழிங்கநல்லுார் : மண்டலம், 197 வது வார்டு, ஒ.எம்.ஆர்., காரப்பாக்கம் பகுதியில், ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்குள்ள, சில பகுதியில் காலி மனைகள் உள்ளன.

இதில், சிலர் குப்பை கொட்டுகின்றனர். சுற்றுவட்டார பகுதியில் உள்ள கழிவு நீர், காலி மனைகளில் விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நாள்பட்ட கழிவுநீரில், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால், சுற்றி வசிப்போர் துாக்கத்தை தொலைத்து மிகவும் சிரமப்படுகின்றனர். கொசுவால், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் உள்ளது.காலி மனைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என, மனை உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்க வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.காலி மனைகளில், கழிவு நீர், குப்பை கொட்டுவதை தடுத்து, சுத்தமாக வைத்திருக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X