உலகின் மருந்தகமாகும் இந்தியா விஞ்ஞானி சவுமியா பெருமிதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உலகின் மருந்தகமாகும் இந்தியா விஞ்ஞானி சவுமியா பெருமிதம்

Added : அக் 03, 2021
Share
புதுடில்லி-''உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருவது, சுகாதாரத்துறையில் கடந்த 75 ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய சாதனை,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.பின்னடைவுடில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது: கொரோனா காலத்தில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும்
 உலகின் மருந்தகமாகும் இந்தியா விஞ்ஞானி சவுமியா பெருமிதம்

புதுடில்லி-''உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருவது, சுகாதாரத்துறையில் கடந்த 75 ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய சாதனை,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

பின்னடைவுடில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது: கொரோனா காலத்தில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அத்தியாவசிய மருத்துவ சேவை கள் பாதிக்கப்பட்டன. காச நோய், புற்று நோய், இதய நோய், நீரிழிவு உள்ளிட்ட தொற்று தன்மை இல்லாத நோய்களுக்கான சிகிச்சைகள், கர்ப்பிணியர் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சைகளும் பெரும் பின்னடைவை சந்தித்தன.எனவே, வரும் நாட்களில் எந்தெந்த நோய் சிகிச்சைகளில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை கவனமுடன் கண்டறிய வேண்டும்.

வருங்காலத்தில் சுகாதார நெருக்கடி ஏற்படும்போது அத்தியாவசிய மருத்துவ சேவைகள் பாதிக்காமல் இருக்க நாம் திட்டங்களை வகுக்க வேண்டும்.'இந்தியாவில் நோய்கள் பரவவும், 5 வயதுக்கு குறைவான குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிக்கவும், ஊட்டச்சத்து குறைபாடே காரணம்' என, குழந்தைகளுக்கான ஐ.நா., நிதியம் தெரிவிக்கிறது. இந்த கொரோனா காலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடும் அதிகரித்து உள்ளது. இது பல்வேறு நோய்கள் அதிகரிக்க வழி செய்யும். இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாய் - சேய்போலியோ உட்பட, தடுப்பூசிகளால் தவிர்க்கப்பட கூடிய சில நோய்கள், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளன. பிரசவத்தின் போது தாய் - சேய் உயிர்இழப்பு குறைக்கப்பட்டுள்ளது. உலகின் மருந்தகமாக இந்தியா செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X