பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் வாலிபர் உயிரிழப்பு லாரியை சிறைபிடித்த மக்கள்

Added : அக் 03, 2021
Share
Advertisement
திருவல்லிக்கேணி ; விபத்தில் வாலிபர் உயிரிழப்பிற்கு காரணமான லாரியை, பொதுமக்கள் சிறைபிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.திருவல்லிக்கேணி, தாயார் சாஹிப் 2வது தெருவைச் சேர்ந்தவர் முகமது ஜினைத், 23. இவர், நேற்று அதிகாலை இரு சக்கர வாகனத்தில், திருவல்லிக்கேணி வாலாஜா சாலை வழியாக சென்றார்.'கோனிக்கா கலர் லேப்' அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி அவரது வாகனத்தில் மோதியது. இதில்
 விபத்தில் வாலிபர் உயிரிழப்பு லாரியை சிறைபிடித்த மக்கள்

திருவல்லிக்கேணி ; விபத்தில் வாலிபர் உயிரிழப்பிற்கு காரணமான லாரியை, பொதுமக்கள் சிறைபிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவல்லிக்கேணி, தாயார் சாஹிப் 2வது தெருவைச் சேர்ந்தவர் முகமது ஜினைத், 23. இவர், நேற்று அதிகாலை இரு சக்கர வாகனத்தில், திருவல்லிக்கேணி வாலாஜா சாலை வழியாக சென்றார்.'கோனிக்கா கலர் லேப்' அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி அவரது வாகனத்தில் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முகமது ஜினைத் மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர், லாரியை சாலையில் நடுவே நிறுத்தி, அங்கு இருந்து தப்பினார். தகவலறிந்து வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்து ஏற்படுத்திய லாரியை போலீசார் அப்புறப்படுத்த முற்பட்டபோது, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஓட்டுனரை கைது செய்யும்வரை, வாகனத்தை அப்புறப்படுத்த விடமாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா சதுக்கம் போலீசார், சமரசம் பேசி விரைவில் ஓட்டுனரை கைது செய்வோம் என, உறுதி அளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X