திரிகோணமலையில் வெளியுறவு செயலர் ஆய்வு| Dinamalar

திரிகோணமலையில் வெளியுறவு செயலர் ஆய்வு

Added : அக் 03, 2021
Share
கொழும்பு-இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, திரிகோணமலை எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை நேரில் சென்று பார்வையிட்டார்.நம் அண்டை நாடான இலங்கையின் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள துறைமுகத்தில், எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. உலகின் மிக ஆழமான இயற்கை துறைமுகமாக கருதப்படும் இந்த துறைமுகம், இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டன் படையால்
 திரிகோணமலையில் வெளியுறவு செயலர் ஆய்வு

கொழும்பு-இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, திரிகோணமலை எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

நம் அண்டை நாடான இலங்கையின் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள துறைமுகத்தில், எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. உலகின் மிக ஆழமான இயற்கை துறைமுகமாக கருதப்படும் இந்த துறைமுகம், இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டன் படையால் உருவாக்கப்பட்டது.கடந்த 2003ம் ஆண்டு, ஐ.ஓ.சி., எனப்படும், 'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் துணை நிறுவனமான லங்கா ஐ.ஓ.சி., நிறுவனம், இந்த துறைமுகத்தில் உள்ள 99 எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை, 35 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துஉள்ளது.

இந்நிலையில், அரசு முறைப் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இந்த எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் இருக்கும் பகுதிக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். இதையடுத்து, கண்டி நகரில் உள்ள புத்தர் கோவிலுக்கு சென்ற ஷ்ரிங்லா வழிபாடு நடத்தினார். புத்தரின் புனித பல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இந்த கோவிலில், இந்தியா மற்றும் இலங்கை மக்களின் நலனுக்காக, ஷ்ரிங்லா பிரார்த்தனை செய்ததாக, துாதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X