பொது செய்தி

தமிழ்நாடு

கடைசி தேர்தலை சந்திக்கும் பரங்கிமலை ஒன்றியம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
புறநகரில் உள்ள பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் இயங்கும் ஊராட்சிகள், கடைசி ஊராட்சி தேர்தலை சந்திக்கின்றன. அங்கு பல புதுமுகங்கள் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர். அவர்கள், வாக்குறுதிகளை அள்ளி வீசி, தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் இயங்கும் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளை



புறநகரில் உள்ள பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் இயங்கும் ஊராட்சிகள், கடைசி ஊராட்சி தேர்தலை சந்திக்கின்றன. அங்கு பல புதுமுகங்கள் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

அவர்கள், வாக்குறுதிகளை அள்ளி வீசி, தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் இயங்கும் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளை சுற்றி, பேரூராட்சி முதல் நகராட்சி வரை வெவ்வேறு நிலைகளில் ஏராளமான உள்ளாட்சி அமைப்புகள் இருந்தன.இவற்றில், ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள், 25 ஊராட்சிகள் ஆகியன, 2011ல் சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கப்பட்டபோது இணைக்கப்பட்டன.மீதமிருந்த ஐந்து நகராட்சிகள், ஐந்து பேரூராட்சிகள் தாம்பரத்தை மையமாக வைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பரங்கிமலை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள் இணைப்பு நடைபெறாத நிலையில், அங்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இன்று மாலை 5:00 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடியவுள்ள நிலையில், புதிதாக களமிறங்கி உள்ள வேட்பாளர்கள் பலரும், வாக்குறுதிகளை அள்ளி வீசியும், பரிசு பொருட்களை வாரி வழங்கியும், வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகின்றனர்.பணம், பொருள்ஊராட்சி ஒன்றியம் சந்திக்கும் கடைசி உள்ளாட்சி தேர்தல் என்பதால், அனைத்து வாக்குறுதிகளும் இடம் பெறும் நிலையில், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு தொடர்பான வாக்குறுதிகளை மட்டும் பெரும்பாலான வேட்பாளர்கள் மறந்து விட்டனர்.சென்னை மாநகராட்சியை ஒட்டிய, மூவரசம்பட்டு, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், ஒட்டியம்பாக்கம், சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல் பகுதிகளில், சமூக ஆர்வலர்களாக இருந்து, சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிடும் சிலர் மட்டும் நீர்நிலைகள் புனரமைப்பு குறித்து வாக்குறுதி அளித்து வருகின்றனர்..
இது, நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வியும் மக்களிடையே எழாமல் இல்லை.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மேடவாக்கத்தில் ஒரு ஓட்டுக்கு ௧ கிராம் தங்க நாணயம்; சித்தாலப்பாக்கத்தில் ஒரு ஓட்டுக்கு ஒரு மூட்டை அரிசி; அகரம் தென் ஊராட்சியில் ஒரு ஓட்டுக்கு 7,௦௦௦ ரூபாய் என, 15 ஊராட்சிகளிலும் பரிசு பொருட்களும், பணமும் விதவிதமாக வழங்கப்படுகின்றன.இதில், அகரம் தென் ஊராட்சியில், தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் போட்டியிடும் ஜெகதீஸ்வரன், தான் வெற்றி பெற்றால், 'கர்ப்பிணியருக்கு பிரசவத்திற்கு 10 ஆயிரம் ரூபாய், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழாவிற்கு ஒரு குடும்பத்துக்கு 25 கிலோ அரிசி மூட்டை, ஊராட்சியில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் தினசரி 20 லிட்டர் வாட்டர் கேன் மற்றும் இலவச வீட்டு குடிநீர் இணைப்பு உட்பட பல சலுகைகள் வழங்கப்படும்' என, அறிவித்து 'போஸ்டர்' ஒட்டி உள்ளார்.நழுவல்கடைசியாக உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதாலும்,

இதன்பின் தாம்பரம் மாநகராட்சியுடன் இந்த ஊராட்சிகள் இணைக்கப்படும் என்பதாலும், வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில், இவரை போன்ற வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகள் நம்ப முடியாத விதமாக இருப்பதுடன், மலைக்கவும் வைக்கின்றன.இவை அனைத்தையும் கூறும் வேட்பாளர்கள், நீர்நிலைகள் பராமரிப்பு குறித்து மட்டும் வாய் திறப்பதே இல்லை.

விபரம் அறிந்தவர்கள் கேட்டாலும், அவர்களை சமாளித்து, அங்கிருந்து நழுவுகின்றனர்.பிரதான கட்சியை சார்ந்தவர்களே, இந்த ஊராட்சிகள் அடங்கியுள்ள, தாம்பரம் மற்றும் பல்லாவரம் சட்டசபை தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்களாகவும், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியின் எம்.பி.,யாகவும் பதவி வகிக்கின்றனர்.ஆனால், கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.தாம்பரம் நகராட்சியில் 12 ஆண்டுகளை கடந்து நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட பணியும், பல்லாவரம் பாதாள சாக்கடை திட்ட பணிகளில் இணைப்புகள் வழங்குவதில் உள்ள குளறுபடியுமே

இதற்கு சான்று.இவ்வாறான நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு பின், புறநகர் ஊராட்சிகளில் கழிவு நீர் மேலாண்மை திட்டங்கள் முறையாக செயல்படுத்தாமல் விடப்பட்டால், நிலைமை மேலும் மோசமாக வாய்ப்பு உள்ளது.எனவே, கவர்ச்சியான வாக்குறுதிகளை தவிர்த்து, வெற்றி பெறும் வேட்பாளர்கள், நீர்நிலைகள் பராமரிப்பு உட்பட அடிப்படை கட்டமைப்பு வசதிகளில், ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X