பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்... மகளிர் சுய உதவிக்குழு கண்காட்சி

Added : அக் 03, 2021
Share
Advertisement
வால்பாறையில், துாய்மை பாரத திட்டத்தின் கீழ், வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பையை, நகராட்சி துாய்மை பணியாளர்கள் தரம் பிரித்து எடுத்து செல்கின்றனர்.மட்கும் குப்பையில், மகளிர் சுய உதவிக்குழுவினர் இயற்கை உரம் தயாரிக்கின்றனர். செடிகள் வளர்ச்சிக்கு அந்த உரத்தை பயன்படுத்துகின்றனர். இவற்றை, கண்காட்சியில் இடம்பெற செய்தனர்.துாய்மை பாரத திட்டத்தின் கீழ், மகளிர் சுய

வால்பாறையில், துாய்மை பாரத திட்டத்தின் கீழ், வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பையை, நகராட்சி துாய்மை பணியாளர்கள் தரம் பிரித்து எடுத்து செல்கின்றனர்.மட்கும் குப்பையில், மகளிர் சுய உதவிக்குழுவினர் இயற்கை உரம் தயாரிக்கின்றனர். செடிகள் வளர்ச்சிக்கு அந்த உரத்தை பயன்படுத்துகின்றனர். இவற்றை, கண்காட்சியில் இடம்பெற செய்தனர்.துாய்மை பாரத திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுவினர் அமைத்த கண்காட்சியை, நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.

வால்பாறை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், அனைத்து கடைகளிலும், வீடுகளிலும் உருவாகும், திட, திரவ கழிவுகளை துாய்மை பணியாளர்கள் தரம் பிரித்து வாங்க வேண்டும்.மட்கும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை பயன்படுத்தி, வீடுகளில் காய்கறி தோட்டம், பூ செடிகள் அமைக்கலாம். மகளிர் சுய உதவிக்குழுவினரின் இந்த முயற்சியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டது.

கிராமங்களை பாதுகாக்க வலியுறுத்தல்
கிணத்துக்கடவு சொக்கனுார் மற்றும் புரவிபாளையம் ஊராட்சிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, கருங்கல் வெட்டி எடுப்புக்கு தடை செய்ய வேண்டும் என, விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தினர்.கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தின் மேற்கு பகுதி கிராமங்கள், கேரளா எல்லையை ஒட்டியுள்ளன. இங்குள்ள, பாலார்பதி, பெரும்பதி பகுதிகளில் குவாரிகள் அமைத்தும், பாறைகளை வெடி வைத்து தகர்த்து, கருங்கற்களை வெட்டி கேரளாவுக்கு அனுப்புகின்றனர்.

இதை தவிர்க்கவும், குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்கவும், இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் இப்பகுதியை பார்வையிட்டு, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கேரள எல்லையை ஒட்டிய சொக்கனுார், வீரப்பகவுண்டனுார், சட்டக்கல்புதுார், கோவிந்தநாயக்கனுார், மற்றும் புரவிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜமீன்களத்துார், பெரும்பதி, காளியாபுரம், தேவம்பாடிவலசு கிராம விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கண்காணிப்பு இல்லாததால் அச்சம்
ஆனைமலை தாலுகா முழுவதிலும், பல இடங்களில் கடைகள், சுற்றுலா பகுதிகளில் மக்கள் பெருங்கூட்டமாக உள்ளனர். குறிப்பாக, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக்கடைகள், டிப்பார்ட்மென்ட ஸ்டோர், ஆழியாறு, டாப்சிலிப், ஆனைமலை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு, மக்கள் கூட்டமாக வருகின்றனர்.
பல கடைகளில் நுழைவுவாயிலில் கிருமிநாசினி கூட வைக்கப்படாமல் உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் அலட்சியமாக உள்ளனர். அரசு துறை அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு, கூட்டத்தை குறைக்கவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்பினர் முறையாக கண்காணிப்பு மேற்கொள்ளாமல் உள்ளதால், கொரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளை பலரும் பின்பற்றுவதில்லை. கொரோனா பரவலை தடுக்க, அதிகாரிகள் முறையாக சுகாதார கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.

'நெட்வொர்க்' இன்றி தொல்லை

அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், வேலுார் உட்பட கிராமங்களில், பி.எஸ்.என்.எல்., மொபைல் நெட்வொர்க் பிரச்னையால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலுாரிலுள்ள பி.எஸ்.என்.எல்., எக்சேன்ஞ் முழுமையான பயன்பாட்டில், இல்லாததால், சுற்றுப்பகுதி கிராமங்களில் இப்பிரச்னை தொடர்கதையாக உள்ளது. எக்சேன்ஞ் கட்டடமும், வளாகமும் போதிய பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளது.

மேலும், மின்சாரம் துண்டிக்கப்படும் போது, ராமச்சந்திராபுரத்திலும், மொபைல் டவர் இயங்காததால், அவசர தேவைகளுக்கு கூட போன் செய்ய முடியவில்லை என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்; ஆன்லைன் வாயிலாக படிக்கும் மாணவர்களும் பாதிக்கப்படுவதை தவிர்க்க, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.ஹிந்து முன்னணி பயிற்சி முகாம்மடத்துக்குளம் நகர ஹிந்து முன்னணி சார்பாக, பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இதில், ஒரு பகுதியாக மூன்று மணி நேர பயிற்சி முகாம் நடந்தது.

இந்நிகழ்ச்சியில், ஹிந்து முன்னணி அடிப்படைக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, ஹிந்துக்கள் பாதுகாப்பு, ஹிந்து கடவுள்கள் வழிபாடுகள், மக்கள் நம்பிக்கையை பெறுவது,இந்து தர்மக்கோட்பாடுகளை பரப்புவது குறித்தும் மற்றும் பல்வேறு தகவல்கள் பயிற்சியில் வழங்கப்பட்டன. இந்த முகாமில் கோவை கோட்ட செயலாளர் பாலச்சந்திரன், மாவட் ட செயற்குழு உறுப்பினர் சரவணகுமார் மற்றும் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தரமில்லாத தரைமட்ட தொட்டி கொண்டம்பட்டி ஊராட்சி வசவநாயக்கன்பட்டியில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தரைமட்ட நீர் தேக்க தொட்டி, கட்டப்பட்டுள்ளது. இத்தொட்டி தரமில்லாமல், கட்டப்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தொட்டி சுவருக்கு, முழுமையாக சிமென்ட் பூச்சு மேற்கொள்ளாமல், மண் போட்டு மூடி, மேற்பகுதியில், பூசியுள்ளனர். தற்போதே தண்ணீர் சுவரில், கசியத்துவங்கியுள்ளது.

பல ஆயிரம் லிட்டர் தண்ணீரை தேக்கி வைக்கும் போது, சுவர் இடிந்து விடும் அபாயம் உள்ளதாக, போட்டோ ஆதாரங்களுடன், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கிராம மக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். உடனடியாக ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.திட்டத்தில் தேவை மாற்றம்உடுமலை ஜல்லிபட்டியில், மா, மொச்சை மற்றும் காய்கறி சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. சாகுபடியில், தொழிலாளர் தட்டுப்பாடு நிலவுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இதை தவிர்க்க, விவசாய பணிகள் அனைத்துக்கும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களை பயன்படுத்த மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஊராட்சியில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.மனுவில், 'தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், தற்போது தென்னை மரங்களுக்கு வட்டப்பாத்தி அமைத்தல், வரப்பு ஏற்படுத்துதல் உட்பட பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. திட்டத்தில், மாற்றம் செய்து, மா மற்றும் காய்கறி சாகுபடி விளைநிலங்களிலும், களையெடுத்தல் உட்பட பணிகளை மேற்கொள்ளுமாறு, திட்டத்தில், மாறுதல் செய்ய வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

புலி குட்டிக்கு தொடர் சிகிச்சை
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகம் முடீஸ் பகுதியில், நடமாடிய புலியை வனத்துறையினர் வலையை கொண்டு பிடித்து கூண்டில் அடைத்துள்ளனர்.மீட்கப்பட்ட ஒரு வயது ஆண் புலிக்குட்டி, முள்ளம்பன்றியை உட்கொண்ட போது, உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், உடல் சோர்வான நிலையில் உள்ள புலிக்கு, ரொட்டிக்கடையில் உள்ள வனஉயிரின மீட்பு மைத்தில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கூண்டில் உள்ள புலிக்குட்டி விரும்பி உட்கொள்ளும் உணவு வழங்கப்பட்டன. தொடர்ந்து காயம் பட்ட பகுதிகளுக்கு மருந்து தடவப்படுகிறது. மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில், வனத்துறையினர், ஆறாவது நாளாக சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது புலியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் ஆகியோர் பார்வையிட்டு, புலியின் உடல் நலம் குறித்தும், சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

சரக்கு வாகனங்கள் அத்துமீறல்

பொள்ளாச்சி பகுதியில், தென்னை சார் தொழில்களில் இருந்து, கட்டுமான பணிகள், கடைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லுதல் என பல்வேறு பணிகளுக்கு, நுாற்றுக்கணக்கான சரக்கு ஆட்டோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.அவற்றில் பல, சாலை விதிகளையும், வாகனச் சட்டங்களையும் மதிக்காமல், விபத்து ஏற்படுத்தும் வகையில், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லுதல், ஆட்களை ஏற்றிச் செல்லுதல், ஏற்றிய பாரத்தை பாதுகாப்பாக கட்டாமல் அலட்சியம் காட்டுவது என, எல்லை தாண்டி செயல்படுகின்றன.இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், கண்டிப்பு காட்டாமல் இருப்பதால், நாளுக்கு நாள் சரக்கு வாகனங்களின் அட்ராசிட்டி அதிகரிக்கிறது. அத்துமீறல் சரக்குவாகனங்களுக்கு, அதிகாரிகள் கடிவாளம் போட வேண்டியது கட்டாயம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X