'ஜல் ஜீவன்' திட்ட பணிகளில் முறைகேடு? கிராம சபையில் வாக்குவாதத்தால் பரபரப்பு

Added : அக் 03, 2021
Share
Advertisement
உடுமலை:புதுப்பாளையம் ஊராட்சியில், 'ஜல் ஜீவன்' திட்டத்தில், மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விளக்கமளிக்கவும், குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, கிராம சபையில், மக்கள் தெரிவித்த புகாரையடுத்து, ஒன்றிய அதிகாரிகள், நேரடி விசாரணை மேற்கொண்டனர்.குடிமங்கலம் ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அடிவள்ளியில், நேற்றுமுன்தினம் கிராம சபை

உடுமலை:புதுப்பாளையம் ஊராட்சியில், 'ஜல் ஜீவன்' திட்டத்தில், மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விளக்கமளிக்கவும், குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, கிராம சபையில், மக்கள் தெரிவித்த புகாரையடுத்து, ஒன்றிய அதிகாரிகள், நேரடி விசாரணை மேற்கொண்டனர்.குடிமங்கலம் ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அடிவள்ளியில், நேற்றுமுன்தினம் கிராம சபை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், குடிநீர் வினியோகத்தில், நிலவும் பிரச்னை குறித்து, ஊராட்சித்தலைவர் பெரியசாமி மற்றும் ஊராட்சி செயலாளர் செந்திலுடன் கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில், ஈடுபட்டனர்.குறிப்பாக, ஊராட்சிக்குட்பட்ட அடிவள்ளி கிராமத்தின் குடிநீர் வினியோகத்தை சீராக்கவும், திருமூர்த்திமலை கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து முழு வினியோகம் பெறவும், 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், ஊராட்சிக்கு, 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்நிதியில், மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் எவ்வித விளக்கமும் அளிக்க மறுக்கின்றனர். கூட்டுக்குடிநீர் திட்ட தண்ணீர் கிராமத்துக்கு வருவதேயில்லை.தற்போது, வினியோகிக்கப்படும் போர்வெல் தண்ணீரால், மக்கள் அதிகளவு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.இப்பிரச்னைக்கு உரிய விளக்கமளிக்கவும், குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு காணும் வரை, கிராம சபை தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என, எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, குடிமங்கலம் பி.டி.ஓ., சுப்பிரமணியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரடியாக சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.குடிநீர் தட்டுப்பாட்டுக்கு, இரு நாட்களில், தீர்வு காணப்படும்; ஜல் ஜீவன் திட்ட பணிகள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் குழுவினர் உறுதியளித்ததால், மக்கள் சமாதானமடைந்து திரும்பிச்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X