வீடு கட்ட இடம் வழங்க கோரிக்கை: 2வது நாளாக பழங்குடியினர் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீடு கட்ட இடம் வழங்க கோரிக்கை: 2வது நாளாக பழங்குடியினர் போராட்டம்

Added : அக் 03, 2021
Share
வால்பாறை:வால்பாறை அருகே, தெப்பக்குளம்மேடு பகுதியில், கல்லார் பழங்குடியின மக்கள் நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வால்பாறை அடுத்துள்ளது கல்லார் செட்டில்மென்ட். இங்கு, காடர் இனத்தை சேர்ந்த, 23 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன.கடந்த, 2018ம் ஆண்டு பெய்த கனமழைக்கு, இந்த செட்டில்மென்ட் பகுதியில், வீடுகள் அனைத்தும் மண்ணில் புதைந்தன.
 வீடு கட்ட இடம் வழங்க கோரிக்கை: 2வது நாளாக பழங்குடியினர் போராட்டம்

வால்பாறை:வால்பாறை அருகே, தெப்பக்குளம்மேடு பகுதியில், கல்லார் பழங்குடியின மக்கள் நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வால்பாறை அடுத்துள்ளது கல்லார் செட்டில்மென்ட். இங்கு, காடர் இனத்தை சேர்ந்த, 23 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன.கடந்த, 2018ம் ஆண்டு பெய்த கனமழைக்கு, இந்த செட்டில்மென்ட் பகுதியில், வீடுகள் அனைத்தும் மண்ணில் புதைந்தன. வன உரிமை சட்ட படி, மாற்று இடமான தாய்முடி தெப்பக்குளம்மேடு பகுதியில், வீடு கட்ட இடம் தரக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதனையடுத்து, கடந்த ஆண்டு செப்., மாதம் பழங்குடியின மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், வால்பாறை தாசில்தார் தலைமையில், 15 பேர் கொண்ட குழுவினர் தெப்பக்குளம்மேடு பகுதியில் நிலஅளவை செய்தனர். ஆனால், இன்று வரை இடம் வழங்கவில்லை.இதனால், விரக்தியடைந்த கல்லார் பழங்குடியின மக்கள் தெப்பக்குளம்மேடு பகுதியில் வீடு கட்ட இடம் வழங்க கோரி, நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர்.
நேற்று இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது.போராட்டத்துக்கு, பழங்குடியின மக்களின் செயல்பாட்டாளர் தனராஜ், மூப்பன் சக்திவேல், செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் தலைமை வகித்தனர். பழங்குடியின மக்களின் போராட்டத்துக்கு, ஏ.டி.பி., தொழிற்சங்க மாநில தலைவர் அமீது, சி.ஐ.டி.யு.,தொழிற்சங்க பொதுச்செயலாளர் பரமசிவம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உட்பட அமைப்புக்களை சேர்ந்தவர்கள், நேரில் சென்று ஆதரவு தெரிவித்து பேசினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X