பொது செய்தி

தமிழ்நாடு

பார்க்கும் வாகனங்களில் எல்லாம் 'பம்பர்'

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் வாகனங்களில், கோர்ட் உத்தரவுப்படி, 'பம்பர்' அகற்றப்படவில்லை.அரசு மற்றும் தனியார், கார் உள்ளிட்ட வாகனங்களில் 'பம்பர்' பொருத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது சேதாரம் ஏற்படுவதை தவிர்க்க, 'பம்பர்' பொருத்துகின்றனர்.'பம்பர்' பொருத்தாத காரில், 'சீட் பெல்ட்' அணிந்து
 பார்க்கும் வாகனங்களில் எல்லாம் 'பம்பர்'

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் வாகனங்களில், கோர்ட் உத்தரவுப்படி, 'பம்பர்' அகற்றப்படவில்லை.அரசு மற்றும் தனியார், கார் உள்ளிட்ட வாகனங்களில் 'பம்பர்' பொருத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது சேதாரம் ஏற்படுவதை தவிர்க்க, 'பம்பர்' பொருத்துகின்றனர்.

'பம்பர்' பொருத்தாத காரில், 'சீட் பெல்ட்' அணிந்து செல்லும் போது, விபத்து ஏற்பட்டால் 'சென்சார்' உடனடியாக செயல்பட்டு, 'ஏர் பேக்' விரிவடைந்து, காரில் இருப்பவர்கள் உயிரை காக்கும். ஆனால், 'பம்பர்' பொருத்திய கார், விபத்துக்கு உள்ளாகும் போது, அதிர்வுகளை பம்பர் தாங்கிக் கொள்வதால், 'சென்சார்' செயல்படாமல், 'ஏர் பேக்' விரிவடையாமல் பலரும் மரணிக்கின்றனர்.இதனால், காரில் செல்பவர்கள் மற்றும் எதிரே மோதும் வாகனங்கள், ஆட்களின் பாதுகாப்பு கருதி, வாகனங்களில் 'பம்பர்' பொருத்த அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா முழுவதிலும் அரசியல் கட்சியினர், அரசு வாகனங்கள், 'பம்பர்' பொருத்தி உலா வருகின்றன. திவான்சாபுதுார் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் நடப்பதால், தி.மு.க., அ.தி.மு.க., உள்பட பல அரசியல் கட்சியினர், எம்.எல்.ஏ.,க்கள் வந்து செல்கின்றனர். ஆனால், பெரும்பாலான அரசியல் கட்சியினர் கோர்ட் தடையை மீறி, வாகனங்களில் 'பம்பர்' பொருத்தி உள்ளனர்.பலரும் முகப்பு பகுதியில் பதிவு எண் கூட எழுதாமல், கோர்ட் உத்தரவை காற்றில் பறக்கவிட்டுள்ளனர். இதை வட்டார போக்குவரத்து துறையினர் மற்றும் போலீசார் கண்டும் காணாமல் அலட்சியமாக உள்ளனர்.அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகளின் வாகனங்களில், 'பம்பர்'களை அகற்றி, வழக்குப்பதிவு செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X