பொது செய்தி

தமிழ்நாடு

சாலைகள் விரிவாக்க திட்டத்தில் மரக்கன்று வளர்க்க மாற்று யோசனை

Added : அக் 03, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:'பசுமை'க்கு பெயர் பெற்ற பொள்ளாச்சி சாலைகளில், விரிவாக்க பணிக்கு மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்நிலையில், திட்டப்பணி மேற்கொள்ளும் போதே, 'நர்சரி' அமைத்து மரக்கன்றுகள் வளர்த்து, நடவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை உருவாக்க வேண்டும்.பொள்ளாச்சி என்றாலே பசுமையான சாலைகள் தான் நினைவுக்கு வரும். ஆனால், இன்றோ, பாதைகளில் பசுமை இழந்து விடுமோ என்ற அச்சம்
 சாலைகள் விரிவாக்க திட்டத்தில் மரக்கன்று வளர்க்க மாற்று யோசனை

பொள்ளாச்சி:'பசுமை'க்கு பெயர் பெற்ற பொள்ளாச்சி சாலைகளில், விரிவாக்க பணிக்கு மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்நிலையில், திட்டப்பணி மேற்கொள்ளும் போதே, 'நர்சரி' அமைத்து மரக்கன்றுகள் வளர்த்து, நடவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை உருவாக்க வேண்டும்.

பொள்ளாச்சி என்றாலே பசுமையான சாலைகள் தான் நினைவுக்கு வரும். ஆனால், இன்றோ, பாதைகளில் பசுமை இழந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. பொள்ளாச்சி சாலைகளில், வளர்ச்சி பணிக்காக மரங்கள் வெட்டி சாய்க்கப்படுவதே இதற்கு காரணமாகும்.பொள்ளாச்சி - கோவை ரோடு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்ட பின், போக்குவரத்துக்கு உகந்த சாலையாக மாறினாலும், வாகன ஓட்டுனர்கள் ஒதுங்கி நிற்கக் கூட நிழல் தரும் மரங்கள் இல்லை. அதே நிலை, பொள்ளாச்சி - உடுமலை ரோட்டிலும் ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், கெடிமேடு, கோலார்பட்டி பகுதிகளில், நான்கு வழிச்சாலைக்காக ரோட்டின் இருபக்கமும் வளர்ந்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு 'பொட்டல்' காடாக மாறியுள்ளது.பல ஆண்டு மரங்கள், வெட்டி துண்டு, துண்டாக கிடக்கின்றன. இதே நிலை நீடித்தால், பசுமை பாதை என்பதற்கு அடையாளம் இல்லாமல் போய்விடும் என இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:எத்தனை மரங்கள் வேண்டுமென்றாலும் வெட்டலாம்; அதற்கு ஈடாக மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும். ஆனால், மரக்கன்று நடவு செய்துள்ளோம் என, காகித கணக்கு மட்டும் காட்டப்படுகிறது.அதற்கு மாற்றாக, நெடுஞ்சாலை திட்ட ஒப்பந்ததாரர்கள், 'கான்கிரீட் பிளான்ட்' அமைப்பதை போன்று, 'நர்சரி' அமைத்து மரக்கன்றுகள் வளர்க்க இடம் ஒதுக்க வேண்டும்.
திட்டபணி முடிந்ததும், வளர்ந்த மரக்கன்றுகளை சாலை ஓரங்களில் நடவு செய்து பராமரிக்க வேண்டும். திட்டப்பணி ஒப்பந்தத்தில் இதற்கான நிபந்தனையை உருவாக்க வேண்டும். கடைபிடிக்காவிட்டால், ஒப்பந்ததாரரை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X