பொது செய்தி

தமிழ்நாடு

வெட்டினால்... வீழ்வேன் என நினைத்தாயோ! மறுநடவு செய்த மரங்கள் செழிப்பு:முன்னுதாரண முயற்சிக்கு வெற்றி

Added : அக் 03, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், வளர்ச்சிப்பணிக்காக வெட்டப்பட இருந்த மரங்கள், மறுநடவு செய்யப்பட்டன. தற்போது, அவை நன்றாக வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கின்றன.பொள்ளாச்சியில் வளர்ச்சிப்பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்த நிலையை மாற்றும் வகையில், பொள்ளாச்சி பகுதியில், மரங்களுக்கு மறுவாழ்வு என்ற பெயரில், பழமையான மரங்களை வெட்டாமல், மாற்று இடத்தில் பாதுகாப்பாக நடவு
 வெட்டினால்... வீழ்வேன் என நினைத்தாயோ! மறுநடவு செய்த மரங்கள் செழிப்பு:முன்னுதாரண முயற்சிக்கு வெற்றி

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், வளர்ச்சிப்பணிக்காக வெட்டப்பட இருந்த மரங்கள், மறுநடவு செய்யப்பட்டன. தற்போது, அவை நன்றாக வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கின்றன.பொள்ளாச்சியில் வளர்ச்சிப்பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்த நிலையை மாற்றும் வகையில், பொள்ளாச்சி பகுதியில், மரங்களுக்கு மறுவாழ்வு என்ற பெயரில், பழமையான மரங்களை வெட்டாமல், மாற்று இடத்தில் பாதுகாப்பாக நடவு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அதில், பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில், கூடுதல் கட்டடத்திற்காக, 120 ஆண்டுகள் ஆன பழமையான இச்சி மரம் நகராட்சி ஒத்துழைப்புடன், மருத்துவமனையிலிருந்து கொண்டு சென்று, சில ஆண்டுக்கு முன் ஜோதிநகரில் நடப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, காந்தி மார்க்கெட் விரிவாக்க பணிக்காக, 30 ஆண்டுகளான அரச மரம், வேப்ப மரம் ஆகியன ஜோதிநகருக்கு கொண்டு செல்லப்பட்டு வளர்க்கப்படுகிறது.பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக, 40 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் ஜோதிநகரில் நடப்பட்டது.

உடுமலை ரோடு விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட அரச மரம், எம்.ஜி.ஆர்., நகரில் நடவு செய்யப்பட்டது. இந்த மரங்களில், காயம் பட்ட இடங்களில் மருந்து அளித்து, தானியங்கி வாயிலாக தண்ணீர் கொடுக்கப்பட்டன. மரங்கள் நன்றாக வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கின்றன.மரங்கள் மறுநடவு செய்யப்பட்ட இடத்தில் பூங்கா அமைக்கப்பட்டாலும், அந்த மரங்கள் வெட்டாமல் பாதுகாக்கப்படுகிறது.
இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், 'மரங்கள் மறுநடவு செய்து பராமரித்ததால், அவை வளர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கின்றன. இந்த திட்டம் முன் உதாரணமாக மாறியுள்ளது; பறவைகளுக்கு வாழ்விடம் கிடைத்துள்ளது.மரங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதால் இயற்கையை பாதுகாக்க முடியும். வளர்ச்சிப்பணிக்காக மரங்களை வெட்ட நேர்ந்தால், வேருடன் தோண்டி எடுத்து அதே பகுதியில் காலியிடத்தில் நடவு செய்து பராமரிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X