அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் உடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு

Added : அக் 03, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை-''நாட்டில் சிறந்த முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார். மக்களுக்காக அவர், 18 முதல் 19 மணி நேரம் உழைக்கிறார்,'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத், நேற்று முன்தினம் சென்னை வந்தார். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த தொழிலதிபர் அபுபக்கர் இல்ல திருமண வரவேற்பு
 முதல்வர் ஸ்டாலின் உடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு

சென்னை-''நாட்டில் சிறந்த முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார். மக்களுக்காக அவர், 18 முதல் 19 மணி நேரம் உழைக்கிறார்,'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத், நேற்று முன்தினம் சென்னை வந்தார். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த தொழிலதிபர் அபுபக்கர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.சென்னையில் தங்கிய அவர், நேற்று காலை முதல்வர் ஸ்டாலினை, அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில், தன் மனைவியுடன் சென்று சந்தித்தார்.

அப்போது, தி.மு.க., - எம்.பி.,க்கள் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஸ்டாலின் மனைவி துர்கா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.ஸ்டாலினை சந்தித்த பின், குலாம் நபி ஆசாத் கூறியதாவது: முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், முதல்முறையாக அவரை சந்தித்தேன். இது, நட்பு ரீதியான சந்திப்பு. எங்களது இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான உறவு, 43 ஆண்டு களுக்கு மேலானது. நான் இருக்கும் வரை, இரண்டு குடும்பங்களுக்கும் இடையேயான உறவு தொடரும். கொரோனா காரணமாக, சென்னைக்கு பல மாதங்களாக வரவில்லை. இப்போது தான் மனைவியுடன் சென்னைக்கு வந்துள்ளேன்.நாட்டின் சிறந்த முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார்.

அவர் மக்களுக்காக 18 முதல் 19 மணி நேரம் உழைக்கிறார். தந்தை கருணாநிதி போன்றே மகன் ஸ்டாலினின் செயல்பாடுகள் உள்ளன. அவரது செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.புறக்கணிப்பு ஏன்?குலாம்நபி ஆசாத், தமிழகம் வரும் போது, தமிழக காங்., நிர்வாகிகள் அவரை வரவேற்கச் செல்வர்; அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வர்.

தற்போது, காங்., தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கி உள்ளோரில், குலாம்நபி ஆசாத் முக்கியமானவர் என்பதால், கட்சி நிர்வாகிகள் யாரும், அவரை வரவேற்க செல்லவில்லை; சந்திப்பதையும் தவிர்த்து விட்டனர் என்று காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
04-அக்-202115:40:12 IST Report Abuse
J. G. Muthuraj பார்ரா...சொந்தக்காட்சிக்காரங்கள பாக்காம.....ஸ்டாலினை குடும்பத்துடன் சந்திக்கிறார்.......பேசாம ஸ்டாலின் புதிய தலைவரை தமிழ்நாடு காங்கிரஸுக்கு நியமிக்கலாம்....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
04-அக்-202113:59:35 IST Report Abuse
raja ஒரே ஒரு கொல்லைப்புற எம்பி சீட்டு மட்டும் எனக்கு கொடுங்கன்னு கேட்க வந்தீங்கன்னு வெளிப்படையா சொல்லவா முடியும்.....
Rate this:
Cancel
Mohan - COIMBATORE,இந்தியா
04-அக்-202112:53:35 IST Report Abuse
Mohan 19 மணி நேரம் உழைக்கிறார் ...ஒ ஹோ ஆ ஹஹா என்னமா புளுகுறான் பாரு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X