பொது செய்தி

தமிழ்நாடு

தென்னையில் வாடல் நோய்: தடுப்பு முறைகளுக்கு அறிவுரை

Added : அக் 03, 2021
Share
Advertisement
உடுமலை:தென்னையில், கேரள வாடல் நோய் பரவல் தென்படுவதால், தேவையான நோய்த்தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த, குடிமங்கலம் வட்டார வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது. தற்போது, இச்சாகுபடியில், பரவலாக வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது; கேரள வாடல் நோய் பரவலும் துவங்கியுள்ளது.இது குறித்து, குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி
 தென்னையில் வாடல் நோய்: தடுப்பு முறைகளுக்கு அறிவுரை

உடுமலை:தென்னையில், கேரள வாடல் நோய் பரவல் தென்படுவதால், தேவையான நோய்த்தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த, குடிமங்கலம் வட்டார வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது. தற்போது, இச்சாகுபடியில், பரவலாக வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது; கேரள வாடல் நோய் பரவலும் துவங்கியுள்ளது.இது குறித்து, குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் திருமகள்ஜோதி, ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் உதவி பேராசிரியர் வினோத்குமார், பயிர் நோய் உதவி பேராசிரியர் லதா, பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் கவிதா உட்பட குழுவினர், ஆய்வு நடத்தினர்.விருகல்பட்டி, கொசவம்பாளையம், வாகத்தொழுவு உள்ளிட்ட கிராமங்களில், வாடல் நோய் தாக்கம் இருப்பதை குழுவினர் கண்டறிந்தனர்.இது குறித்து குழுவினர் கூறியதாவது: கேரள வாடல் நோய்த்தாக்கிய மரங்களில் குரும்பை உதிர்தல், இலை மஞ்சள் நிறமாவது, இலை நுனி கருகுவது, பாளை அழுகல் மற்றும் மட்டை விலா எலும்பு போல காட்சியளித்தல் போன்ற அறிகுறிகள் வாயிலாக கண்டறியலாம்.இந்நோய் பிற மரங்களுக்கு பரவுவதை தவிர்க்கும் வகையில், நோய் தாக்கிய மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். அனைத்து விவசாயிகளும், ஒருங்கிணைந்த, மேலாண்மை முறைகளை பின்பற்ற வேண்டும்.நோய் தடுப்பு மேலாண்மைஒரு மரத்துக்கு, ஆண்டுக்கு, யூரியா, 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ், 3.5 கிலோ, நுண்ணுாட்ட கலவை, 1 கிலோ இட வேண்டும். தென்னை டானிக் 25 மி.லி.,யை, 175 மி.லி., தண்ணிரில் கலந்து, ஆண்டுக்கு இரு முறை வேரில் கட்ட வேண்டும்.தென்னையை தாக்கும் நோய்களை வரும் முன் காக்க, அரை வட்டபாத்தியில், பேசில்லஸ், டிரைக்கேடாடெர்மாவிரிடி தலா 200 கிராம்; அசோஸ்பைரில்லம், 100 கிராம்; பாஸ்போபாக்டீரியா 100 கிராம், 50 கிலோ மக்கிய தொழு உரம், 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு தவறாமல் இட வேண்டும்.பசுந்தாள் உரமான, சணப்பை, கொளுஞ்சி, தக்கை பூடு ஆகியவற்றை வட்டப்பாத்தி அல்லது தோப்பு முழுவதும், வளர்த்து மட்கி உழ வேண்டும்.தோப்பில், அடிக்கடி களைக்கொல்லி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தொடர்ச்சியாக களைக்கொல்லி பயன்படுத்துவதால், மண்ணின் வளம் பாதிப்பதுடன், மரங்களின் வளர்ச்சியை பாதிக்கும். இந்த மேலாண்மை முறைகளை, பின்பற்றினால், நோய்த்தாக்குதலை தவிர்க்கலாம். இவ்வாறு, அக்குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X