அரசியல் செய்தி

தமிழ்நாடு

காணிக்கை நகைகளை உருக்குவதில் எந்த தவறும் நடக்காது: சேகர்பாபு

Added : அக் 03, 2021
Share
Advertisement
சென்னை-''நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக்கும் பணியில், எந்த தவறும் நடக்காது,'' என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.சென்னை தங்கசாலையில் உள்ள ராமலிங்க அடிகளார் வாழ்ந்த வீட்டை பார்வையிட்ட பின், அவர் அளித்த பேட்டி:மனித புனிதர் ராமலிங்க அடிகளார், 33 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை ஆய்வு செய்தேன். தற்போது புனரமைப்பு பணி நடக்கிறது. வடலுாரில் 72 ஏக்கரில் சர்வதேச

சென்னை-''நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக்கும் பணியில், எந்த தவறும் நடக்காது,'' என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை தங்கசாலையில் உள்ள ராமலிங்க அடிகளார் வாழ்ந்த வீட்டை பார்வையிட்ட பின், அவர் அளித்த பேட்டி:மனித புனிதர் ராமலிங்க அடிகளார், 33 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை ஆய்வு செய்தேன். தற்போது புனரமைப்பு பணி நடக்கிறது. வடலுாரில் 72 ஏக்கரில் சர்வதேச வள்ளலார் மையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது; அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, வரைபடம் தயாரிக்கும் பணி நடக்கிறது.

விரைவில் அந்த மையம் அமைக்கும் பணி செயல்படுத்தப்படும்.மன்னர்கள், ஜமீன்தார்கள், செல்வந்தர்கள் கோவில்களுக்கு வழங்கிய நகைகளை உருக்கப் போவதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக காணிக்கையாக வந்த நகைகள், எந்த பயன்பாடுமின்றி தேங்கிய, உடைந்த நகைகள் தான் உருக்கப்பட உள்ளன.மும்பையில் உள்ள மத்திய அரசிற்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி, அவற்றை தங்கக் கட்டிகளாக்கி, வங்கிகளில் இருப்பு வைத்து, அதன் வாயிலாக கிடைக்கும் வருவாய், கோவில் பணிகளுக்கு பயன்படுத்தப்படும். திருப்பதியில் இதே நடைமுறையை பின்பற்றுகின்றனர்.

தமிழகத்தில் 1977ல் இருந்து இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்தது. பிரதமர் மோடி அறங்காவலராக இருந்த சோம்நாத் கோவிலிலும் இந்த நடைமுறை உள்ளது.இறைவன் சொத்து இறைவனுக்கே; அய்யப்பன் மீது சாட்சியாகச் சொல்கிறேன், தங்கத்தை உருக்கி கட்டிகளாக்கும் பணியில், எந்த தவறும் நடக்காது.

கொரோனா பரவாது என்ற சூழல் ஏற்பட்டவுடன், கோவில்களில் பக்தர்கள் தினமும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதுவரை, பக்தர்களுக்கு அனுமதியில்லாத மூன்று நாட்களில், பூஜைகள் மட்டும் முறையாக நடக்கும்.இவ்வாறு சேகர்பாபு கூறினார்.ஆய்வின் போது, ஹிந்து அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், இணை கமிஷனர் ஹரிபிரியா, சென்னை உதவி கமிஷனர் கவேனிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X