சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் ராஜகோபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Added : அக் 03, 2021
Share
Advertisement
சென்னை -பள்ளி மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மீது, அசோக் நகர் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.நங்கநல்லுார், ஹிந்து காலனி 7வது தெருவைச் சேர்ந்த ராஜகோபாலன், 59. இவர், கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர்.அப்பள்ளியில் பயிலும் மாணவியருக்கு 'வாட்ஸ் ஆப்' வாயிலாக ஆபாச தகவல்கள் மற்றும்

சென்னை -பள்ளி மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மீது, அசோக் நகர் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

நங்கநல்லுார், ஹிந்து காலனி 7வது தெருவைச் சேர்ந்த ராஜகோபாலன், 59. இவர், கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர்.அப்பள்ளியில் பயிலும் மாணவியருக்கு 'வாட்ஸ் ஆப்' வாயிலாக ஆபாச தகவல்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பி பாலியல் அத்துமீறில் ஈடுபட்டதாக, மாணவியரின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தனர்.மேலும், இந்த குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இது குறித்து, சென்னை பெருநகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின்படி, அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இதில், ராஜகோபாலன் மீது 'போக்சோ' சட்டப்பிரிவு உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஏப்., 24ம் தேதி, ராஜகோபால் கைது செய்யப்பட்டார்.வழக்கு விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 'போக்சோ' நீதிமன்றத்தில், ராஜகோபாலன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X