பொது செய்தி

தமிழ்நாடு

கிராம சபை கூட்டத்தில் வளர்ச்சிக்கான தீர்மானங்கள்: பல ஊராட்சிகளில் பெயரளவுக்கு நடந்தது

Added : அக் 03, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, உடுமலை ஒன்றிய ஊராட்சிகளில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டங்களில் ஊரக வளர்ச்சி, மேம்பாட்டுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.காந்தி ஜெயந்தி தினத்தில், மாநிலம் முழுக்க கிராம சபை கூட்டம் நடந்தது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, 39 ஊராட்சிகளில், போளியகவுண்டன்பாளையம், ஜமீன் முத்துார் ஊராட்சிகளில் உள்ளாட்சி இடைத்தேர்தல்
 கிராம சபை கூட்டத்தில் வளர்ச்சிக்கான தீர்மானங்கள்: பல ஊராட்சிகளில் பெயரளவுக்கு நடந்தது

பொள்ளாச்சி, உடுமலை ஒன்றிய ஊராட்சிகளில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டங்களில் ஊரக வளர்ச்சி, மேம்பாட்டுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.காந்தி ஜெயந்தி தினத்தில், மாநிலம் முழுக்க கிராம சபை கூட்டம் நடந்தது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, 39 ஊராட்சிகளில், போளியகவுண்டன்பாளையம், ஜமீன் முத்துார் ஊராட்சிகளில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடப்பதால், தேர்தல் விதிகளின்படி, அந்த ஊராட்சிகளில் கிராம சபை நடக்கவில்லை. மற்ற, 37 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பெண்கள், 3,033 பேர் உட்பட, 5,265 பேர் பங்கேற்றனர். மொத்தம், 1,405 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, 26 ஊராட்சிகளில், தென்குமாரபாளையத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடப்பதால், அங்கு கிராம சபை நடக்கவில்லை. மற்ற, 25 ஊராட்சிகளில் நடந்த கூட்டங்களில், பெண்கள், 2,182 பேர் உட்பட, மொத்தம், 3,918 பேர் பங்கேற்றனர். மொத்தம், 985 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு ஒன்றியத்திலுள்ள, 34 ஊராட்சிகளில், நெ.10 முத்துார் ஊராட்சியில் 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடப்பதால், அந்து ஊராட்சியை தவிர்த்து மற்ற பகுதிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது.

ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய அதிகாரிகள், ஒன்றிய, மாவட்ட வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில், மக்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர வேண்டும். குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். கிராம துாய்மையை காக்க வேண்டும். குட்டைகளை துார்வாரி, மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.சட்டவிரோத கல்குவாரிகளை தடை செய்து, விவசாயத்தை காக்க வேண்டும் என்பன உள்பட, 1,281 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிராம சபை கூட்டங்களில், மொத்தம், 5,580 பேர் பங்கேற்றனர்.ஆனைமலைஆனைமலை ஒன்றியத்திலுள்ள, 19 ஊராட்சிகளில், திவான்சாபுதுார் ஊராட்சியில் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் நடப்பதால், அந்த ஊராட்சி தவிர்த்து, 18 ஊராட்சிகளில் நேற்று முன்தினம் கிராம சபைக்கூட்டம் நடந்தது.இதில், 1,977 பெண்கள் உள்பட, 3,410 பேர் பங்கேற்றனர். இதில், பிளாஸ்டிக் ஒழிப்பு, அடிப்படை வசதிகள் மேம்பாடு, கிராம வளர்ச்சி திட்டம் உள்பட, 662 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பல ஊராட்சிகளில், வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை கொண்டு, பெயரளவுக்கு கிராம சபைக்கூட்டம் நடந்தது.
உடுமலை
உடுமலை ஒன்றியத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் காரணமாக, ஆர்.வேலுார் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. மீதமுள்ள, 37 ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டத்தில், 1,560க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செல்லப்பம்பாளையம் ஊராட்சியில், 'ஊராட்சியின், வரவு-செலவு கணக்குகளை, முறையாக தெரிவிக்கவில்லை; பதிவேடுகளையும் பார்வைக்கு வைக்கவில்லை,' என ஒன்றிய அதிகாரிகளிடம், கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மீண்டும் கூட்டம் நடத்தவும், அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியத்தில், வார்டு இடைத்தேர்தல் காரணமாக, ஆமந்தகடவு ஊராட்சியில், கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. பிற, 22 ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிகள் தேர்வு உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேளாண்துறையினர் பங்கேற்று, மானியத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X