பொது செய்தி

தமிழ்நாடு

ஊழல் செய்தவருக்கு உயர் பொறுப்பா?

Added : அக் 03, 2021
Share
Advertisement
தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், அகரமுதலி திட்ட இயக்குனர் மாற்றம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அத்துறையினர் கூறியதாவது:அகரமுதலி திட்ட இயக்குனராக இருந்த தங்க காமராஜை, துணை இயக்குனராக பதவி இறக்கம் செய்து திருப்பூருக்கு மாற்றம் செய்துள்ளனர். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனராக, கூடுதல் பொறுப்பில் பணியாற்றிய கோ.விஜயராகவனை,

தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், அகரமுதலி திட்ட இயக்குனர் மாற்றம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, அத்துறையினர் கூறியதாவது:அகரமுதலி திட்ட இயக்குனராக இருந்த தங்க காமராஜை, துணை இயக்குனராக பதவி இறக்கம் செய்து திருப்பூருக்கு மாற்றம் செய்துள்ளனர். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனராக, கூடுதல் பொறுப்பில் பணியாற்றிய கோ.விஜயராகவனை, அகரமுதலி திட்ட இயக்குனராக நியமித்துஉள்ளனர். இந்த விஜயராகவன், அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க., முன்னாள்- எம்.பி., ஹரியின் சகோதரர். விஜயராகவன் தன் சட்டைப் பையில் ஜெயலலிதா படத்தை வைத்தபடி தான் அலுவலகத்திற்கு வருவார். அதை வைத்து, துறையில் ஏகப்பட்ட தவறுகளை செய்துள்ளார்.

அவை ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.  உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், கையெழுத்து பிரதி பாதுகாப்பு மற்றும் ஆதார மையம் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக 34 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 10 லட்சம் ரூபாய்க்கு மேலான அரசு துறை பணிகளை, பொதுப்பணித் துறை தான் செய்ய வேண்டும். ஆனால், அந்த பணிகளை சாதாரண தச்சு பணியாளர்களை கொண்டு, விஜயராகவன் முடித்து விட்டார். சம்பந்தப்பட்ட துறை செயலர், அப்பணிகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் வாயிலாக மறு மதிப்பீடு செய்ய உத்தரவிட்டார். மறு மதிப்பீட்டில், 20 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு, 14 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருக்கிறது என, அரசுக்கு அறிக்கை அனுப்பினர்  திருக்குறள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அரபு மற்றும் சீன மொழி தவிர, மற்ற பணிகள் அனைத்தும் வலைதளங்களை பார்த்து தட்டச்சு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக, போலி ரசீதுகள் தயார் செய்யப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளது  மொழிபெயர்ப்பு நுால்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டதாக பொய் கணக்கு எழுதப்பட்டது. அரிய நுால்கள் அச்சடிக்கப்படாமலே, அச்சிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளது. அரசின் நிதி உதவி பெற்ற பதிப்பு பணிகளில் பெரும்பாலானவை முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. போலி ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு பொய் கணக்கு எழுதியுள்ளனர் பல்கலை மானியக் குழு அங்கீகாரம் இல்லாமல், நிறுவன ஆராய்ச்சியாளர்களுக்கு ஊதியம் மற்றும் இதரப் படிகள் வழங்கப்பட்டன.

இந்த வகையில், அரசுக்கு 36 லட்சம் ரூபாய் கூடுதலாக இழப்பு ஏற்பட்டிருக்கிறது  நிறுவனத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிக்காக, 2010ல் 3.2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எம்.பி., -- எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இதே பணிக்காக 1.46 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, முகப்பு தோற்றம் மற்றும் உள் நுாலக கட்டடம் கட்ட பயன்படுத்தப்பட்டது என, கணக்கெழுதி விட்டனர். இந்த முறைகேடும் வெளிச்சத்துக்கு வர உள்ளது  ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை துவங்க, பொதுமக்களிடம் இருந்து நிதி வசூல் செய்யப்பட்டது. இதற்காக, நன்கொடையாளர்கள் வருமான வரி சலுகை பெற ரசீதுகள் வழங்கப்பட்டன. இந்த ரசீதுகளை, 'கலர் ஜெராக்ஸ்' எடுத்து கொடுத்து ஏமாற்றி உள்ளனர்  ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தொல்காப்பியர் ஆய்விருக்கை நிறுவ 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. வங்கியில் வைப்பு நிதியாக வைத்து, அதில் இருந்து கிடைக்கும் வட்டி தொகையை வைத்து, ஆய்விருக்கை செயல்படுத்த கோரப்பட்டது.

ஆனால், அந்த பணம் உடனடியாக வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்படவில்லை. இப்படி பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள, கோ.விஜயராகவன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஆனால் அவரைத் தான், தி.மு.க., ஆட்சி பொறுப்புக்கு வந்ததும், அகரமுதலி திட்ட இயக்குனராக நியமித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.'இதில் என்ன தவறு?'-தமிழ் ஆராய்ச்சிக்கு, அரசு சார்பில் எவ்வளவு பணம் ஒதுக்கப்படும் என எல்லாருக்கும் தெரியும். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆண்டுதோறும் 265 நாட்களுக்கும் மேலாக பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன்.எந்த ஆட்சியாக இருந்தாலும், ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் தான் எனக்கு எஜமானர்கள். அவர்கள் என்ன சொல்கின்றனரோ, அதை கேட்டு நடப்பவன் தான் நல்ல ஊழியன். அந்த வகையில், அரசுக்கு அடிபணிந்த ஊழியனாக செயல்பட்டு வருகிறேன்.ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சி இருந்தது. அந்த ஆட்சியாளர்கள் சொன்னதைக் கேட்டு நடந்தேன். தற்போது தி.மு.க., ஆட்சி வந்திருக்கிறது. அவர்கள் சொல்வதை கேட்டு நடக்கிறேன்.

இதில் என்ன தவறு இருக்கிறது?சட்டைப் பையில் ஜெயலலிதா படத்தை வைத்திருந்தேன் என்பது, என் சுய விருப்பம். அதில் யாரும் தலையிட தேவைஇல்லை. அரசு சம்பளத்தை வாங்கி கொண்டு, அரசுக்கும், மக்களுக்கும் பணி புரியாமல் ஏமாற்றித் திரிந்தவர்கள், இன்று என்னைப் பார்த்து விரல் நீட்டினால், நான் குற்றவாளியாகி விடுவேனா? பலரும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் கொடுத்துள்ளனர்; விசாரிக்கட்டும். பெரிய அளவில் நிதி ஆதாரம் இல்லாததால் தானே, துறையின் மேம்பாட்டுக்காக, எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பெற்றேன். இதில் ஊழல் செய்து விட்டேன் என்று சொன்னால், சொல்பவர்களுக்கு மதி கெட்டு விட்டது என்றே அர்த்தம். - -கோ.விஜயராகவன், இயக்குனர், அகரமுதலி திட்டம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X