பொது செய்தி

தமிழ்நாடு

காந்தி ஜெயந்தி விழாவில் சிந்தனைகள் போதனை: அமைப்புகள், கட்சியினர் கொண்டாட்டம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான, அக்., 2ம் தேதி, நாடு முழுக்க காந்தி ஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட்டது.பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஆர்வத்துடன் கொண்டாடப்பட்டது. போடிபாளையம் கிராமத்தில், பசுமைக்குடில் அமைப்பு சார்பில், குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசளிக்கப்பட்டது. களிமண்ணால் காந்தி உருவச்சிலை செய்து, மரியாதை செய்யப்பட்டது. காந்தியின்
 காந்தி ஜெயந்தி விழாவில் சிந்தனைகள் போதனை: அமைப்புகள், கட்சியினர் கொண்டாட்டம்

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான, அக்., 2ம் தேதி, நாடு முழுக்க காந்தி ஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட்டது.பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஆர்வத்துடன் கொண்டாடப்பட்டது. போடிபாளையம் கிராமத்தில், பசுமைக்குடில் அமைப்பு சார்பில், குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசளிக்கப்பட்டது. களிமண்ணால் காந்தி உருவச்சிலை செய்து, மரியாதை செய்யப்பட்டது. காந்தியின் சிந்தனைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

விழாவை, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், நிர்வாகிகள் மதன்ராஜ், விமல் ஆகியோர் நடத்தினர்.சேவாலயம் அறக்கட்டளை சார்பில், பொள்ளாச்சி தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.பொள்ளாச்சி நகர காங்., கட்சியினர், காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாள், சிவாஜி கணேசன் பிறந்த நாள் என, முப்பெரும் விழாவாக கொண்டாடினர்.

கட்சியின் நகரத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிமணி முன்னிலை வகித்தனர்.கோவை தெற்கு மாவட்ட காங்., சார்பில், கோட்டூரில் உள்ள காமராஜர் சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார்.கிணத்துக்கடவுகிணத்துக்கடவில், வட்டார, நகர காங்., சார்பில், காந்தி ஜெயந்தி கொண்டாட்டம், காமராஜர் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. முன்னதாக, மகாத்மா காந்தி திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, வட்டார காங்., தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார்.வால்பாறைவால்பாறை நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார், காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.வால்பாறை காங்., கட்சி சார்பில், நகர காங்., தலைவர் பேபி தலைமையில் காந்திஜெயந்தி விழா நடந்தது. மாவட்ட காங்., துணைத்தலைவர் கருப்பையா, தெற்கு வட்டார காங்., தலைவர் பிரபாகரன், ஆகியோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

உடுமலை
உடுமலையில், பா.ஜ., இதர பிற்படுத்தப்பட்டோர் அணி சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டத்தலைவர் சிவலிங்கம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மேலும், காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.உடுமலையில், காங்., மற்றும் ஐ.என்.டி.யு.சி., சார்பில், காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு, சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காமராஜ் பவனில் கொடியேற்று விழா மற்றும் அன்னதானம் நடந்தது.காங்., மாவட்டத்தலைவர் தென்னரசு, ஐ.என்.டி.யு.சி., மாநிலத்தலைவர் சீனிவாசன், பொதுச்செயலாளர் செல்வன், துணைத்தலைவர் வெங்கிடுசாமி, செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜூ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஐம்பெரும் விழாகாந்திஜெயந்தி, பாரதியார் நுாற்றாண்டு நினைவு, நாராயணகவி பிறந்தநாள், நாராயணகவி இலக்கிய பேரவையின் துவக்கம், துாயோர் விருது வழங்கல் என, ஐம்பெரும் விழா, உடுமலை தேஜஸ் மகாலில் நடந்தது.இலக்கிய பேரவைத்தலைவர் உடுமலை அமிர்தநேயன் தலைமை வகித்தார். முன்னதாக, செயலாளர் ஜெயசிங்லிங்கவாசகம் வரவேற்றார். முத்துசாமி முன்னிலை வகிக்க, வக்கீல் சுந்தரராஜன், மழை உடுமலை ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், பள்ளித்தலைமையாசிரியர் மஞ்சுளாதேவி ஆகியோர் பேசினர்.
கம்பன் தமிழ்ச்சங்கம் தலைவர் இளங்கோவடிகள், முத்தமிழ் மன்றம் சாஸ்திரிசீனிவாசன் ஆகியோர் 'மகாகவியும் நாராயணகவியும்' என்ற தலைப்பில் பேசினர். இந்திரஜித்தின் நினைவு இலக்கிய விருது பழனியப்பனுக்கு வழங்கப்பட்டது.இதையடுத்து, நல்லாசிரியர் விருது மற்றும் 'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருது பெற்றவர்கள், நுாலகர்கள் உள்ளிட்டவர்களுக்கு துாயோர் விருது வழங்கப்பட்டது.- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X