அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து மீண்டும் தவறு செய்யாதீங்க: அண்ணாமலை..

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்-''உள்ளாட்சிகளுக்கு தேவையான நிதி, பிரதமர் மோடியிடம் இருந்து நேரடியாக வருகிறது,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மொளச்சூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் பாபுவை ஆதரித்து, சுங்கு வார்சத்திரத்தில் நேற்று அவர் பேசியதாவது:பிரதமர் மோடி ஆட்சியில்,
 தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து மீண்டும் தவறு செய்யாதீங்க: அண்ணாமலை..

ஸ்ரீபெரும்புதுார்-''உள்ளாட்சிகளுக்கு தேவையான நிதி, பிரதமர் மோடியிடம் இருந்து நேரடியாக வருகிறது,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மொளச்சூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் பாபுவை ஆதரித்து, சுங்கு வார்சத்திரத்தில் நேற்று அவர் பேசியதாவது:பிரதமர் மோடி ஆட்சியில், உள்ளாட்சிகளுக்கு வேண்டிய நிதி, மத்திய அரசிடம் இருந்து நேரடியாக வர ஆரம்பித்து விட்டது.வசதி இல்லாதவர்களுக்கு வீடு, 100 நாள் திட்ட வேலைக்கு சம்பளம், ரேஷன் அரிசி உள்ளிட்ட எந்த திட்டமாக இருந்தாலும், மத்திய அரசு வாயிலாக, உள்ளாட்சி அமைப்புக்கு வந்து கொண்டிருக்கிறது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஓட்டளித்து, தி.மு.க.,வை ஆட்சிக்கு கொண்டு வந்தீர்கள்; தேர்தல் வாக்குறுதியை அவர்கள் முழுமையாக நிறைவேற்றினரா?தேர்தல் பிரசாரத்தின் போது நகையை அடகு வைத்து கடன் வாங்க சொன்ன தி.மு.க.,வினர், நகையை அடகு வைத்தோர் மீது, இப்போது வழக்கு போடுகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து, மறுபடியும் தவறு செய்யாதீர்கள்.இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X