வீதிகளை ஆக்கிரமிக்கும் விளம்பர பலகையால் நெரிசல்

Added : அக் 03, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை நகருக்கு, பெரும் சவாலாக இருப்பது போக்குவரத்து நெரிசலாகும். காரணம், வீதிகளை ஆக்கிரமித்தவாறே, ஒவ்வொரு கடைகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், பாதசாரிகள், பாதுகாப்புடன் நடந்து செல்வதற்கு ஏதுவாக நடைபாதை அமைக்கப்பட்டாலும், அங்கும் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது.இதனால், வணிக ரீதியாக, நகருக்கு வந்து செல்லும் மக்கள், ரோட்டில் நடந்து செல்வதாலும்,

உடுமலை:உடுமலை நகருக்கு, பெரும் சவாலாக இருப்பது போக்குவரத்து நெரிசலாகும். காரணம், வீதிகளை ஆக்கிரமித்தவாறே, ஒவ்வொரு கடைகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், பாதசாரிகள், பாதுகாப்புடன் நடந்து செல்வதற்கு ஏதுவாக நடைபாதை அமைக்கப்பட்டாலும், அங்கும் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது.இதனால், வணிக ரீதியாக, நகருக்கு வந்து செல்லும் மக்கள், ரோட்டில் நடந்து செல்வதாலும், அவ்வப்போது ரோட்டை கடக்க முயற்சிப்பதாலும், விபத்தில் சிக்குகின்றனர்.
தவிர, போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.இது ஒருபுறமிருக்க, கடைகளுக்கு முன், வைக்கப்படும் விளம்பர பலகைகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் தடையாகவும் வைக்கப்படுகிறது, இதனால், முக்கிய வீதிகளில், தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.இதேபோல், நகரில், பாதாளச்சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மழைநீர் வடிகாலாக பயன்படும் கால்வாய்களிலேயே குப்பை கொட்டப்படுகிறது. இதனால், தண்ணீர் மாசடைவதுடன், கழிவுநீர் தேக்கத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழைநீர் வடிகாலை சுத்தப்படுத்தவும்நகராட்சி அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X