பொது செய்தி

தமிழ்நாடு

காலிப்பணியிடங்களை நிரப்புங்க! அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

Added : அக் 03, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலையில், அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை மாநாடு நடந்தது. இதில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.உடுமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், 14 வது வட்டக்கிளை மாநாடு நடந்தது. வட்டக்கிளை தலைவர் வைரமுத்து தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் ராணி துவக்கி வைத்தார்.இதில், பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சாலைப்பணியாளர்களின்,
 காலிப்பணியிடங்களை நிரப்புங்க! அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

உடுமலை:உடுமலையில், அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை மாநாடு நடந்தது. இதில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.உடுமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், 14 வது வட்டக்கிளை மாநாடு நடந்தது. வட்டக்கிளை தலைவர் வைரமுத்து தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் ராணி துவக்கி வைத்தார்.

இதில், பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சாலைப்பணியாளர்களின், 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி, பணப்பலன்களை வழங்க வேண்டும்.சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம ஊழியர், ஊர்புற நூலகர் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும், 8வது ஊதியக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட வகையில், வழங்கப்படாத 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
அரசுத்துறையிலுள்ள, 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.ஜாக்டோ -- ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் வழக்குகளை அரசு ரத்து செய்தும், போலீசார் ரத்து செய்யாமல், இழுத்தடித்து வருகின்றனர். அரசு கலைக்கல்லூரியில் விண்ணப்பிக்கும் அனைத்துப்பிரிவு மாணவ, மாணவியருக்கு, இடம் கிடைத்திட கூடுதல் இடங்களை வழங்க வேண்டும் என 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், மாவட்டச்செயலாளர் பாலசுப்ரமணியம், இணைச்செயலாளர் முத்துச்சாமி, பரமேஸ்வரன், துணைத்தலைவர் சண்முகசுந்தரம், வட்ட கிளைச்செயலாளர் வெங்கிடுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X