பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் கோட்டத்தில் 20 பேருக்கு தொற்று

Added : அக் 03, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 20 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மகாலிங்கபுரம், வடுகபாளையம் பகுதிகளில், நேற்று, ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பொள்ளாச்சி வடக்கு வட்டாரம், குள்ளக்காபாளையத்தில் ஒருவர்; தெற்கு வட்டாரம் குண்டலப்பட்டி, சின்னாம்பாளையத்தில், இருவருக்கு தொற்று உறுதியானது. தாலுகாவில்,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 20 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மகாலிங்கபுரம், வடுகபாளையம் பகுதிகளில், நேற்று, ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பொள்ளாச்சி வடக்கு வட்டாரம், குள்ளக்காபாளையத்தில் ஒருவர்; தெற்கு வட்டாரம் குண்டலப்பட்டி, சின்னாம்பாளையத்தில், இருவருக்கு தொற்று உறுதியானது. தாலுகாவில், மொத்தம், எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு தாலுகாவில், காணியாலம்பாளையம் கிராமத்தில் இருவருக்கு நேற்று, கொரோனா தொற்று பரவல் உறுதியானது.ஆனைமலை தாலுகாவில், நேற்று, கோட்டூர், ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், கரியாஞ்செட்டிபாளையம் பகுதிகளில், ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.வால்பாறையில் முடீஸ் பகுதியை சேர்ந்த, கணவன், மனைவி உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வால்பாறை அரசு மருத்துவமனை கேர் சென்டரில், இரண்டு பேர் சிகிச்சை பெறுகின்றனர்.வருவாய் கோட்டத்தில், நேற்று, 20 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தொற்று பாதித்தோர் குடும்பத்தினரை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X