காந்தி பிறந்த நாள் விழாவில் அதிகாரிக்கு செருப்பு மாட்டி விட்டதால் சர்ச்சை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காந்தி பிறந்த நாள் விழாவில் அதிகாரிக்கு செருப்பு மாட்டி விட்டதால் சர்ச்சை

Added : அக் 03, 2021
Share
ராமநாதபுரம்--ராமநாதபுரத்தில் காந்தி ஜெயந்தி விழாவில் அலுவலக உதவியாளர் நகராட்சி பொறியாளருக்கு செருப்பு மாட்டி விட்ட வீடியோ வெளியாகியுள்ளது.ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் காந்திஜெயந்தி அன்று அவரது சிலைக்கு டி.ஆர்.ஓ.,காமாட்சி கணேசன் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது, நகராட்சி கமிஷனர் நிலேஸ்வர் அங்கு நின்றிருந்தார். அவருக்கு அலுவலக உதவியாளர் ஒருவர்

ராமநாதபுரம்--ராமநாதபுரத்தில் காந்தி ஜெயந்தி விழாவில் அலுவலக உதவியாளர் நகராட்சி பொறியாளருக்கு செருப்பு மாட்டி விட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் காந்திஜெயந்தி அன்று அவரது சிலைக்கு டி.ஆர்.ஓ.,காமாட்சி கணேசன் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது, நகராட்சி கமிஷனர் நிலேஸ்வர் அங்கு நின்றிருந்தார். அவருக்கு அலுவலக உதவியாளர் ஒருவர் காலில் செருப்பை மாட்டி விடுவது போன்ற வீடியோ வெளியானது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.குறித்து நிலேஸ்வரிடம் கேட்டபோது, எனக்கு காலில் கட்டிகள் உள்ளன. வலி உள்ளது. செருப்பு மாட்ட முடியாது. மெதுவாகத்தான் நடப்பேன். எனக்கு உதவியாக அவர் இதனை செய்தார். இது எப்போதும் நடப்பது தான். அலுவலகத்தில் எல்லோருக்குமே தெரியும்,' என்றார். டி.ஆர்.ஓ., காமாட்சி கணேசனிடம் கேட்ட போது, இதுகுறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை. விசாரிக்கிறேன், என்றார்.----

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X